Friday, April 17, 2015

நம்மள கட்டிதழுவ இந்த அன்பு நிறைஞ்ச உலகம் காத்துன்னு இருக்கு.

இரண்டு நாளாக விடாமல் அழுதுக்கொண்டிருந்த என் குழந்தையை மசூதிக்கு தூக்கின்னு போயி ஊதின்னு வான்னு எங்க அம்மா சொன்னாங்க.
இதுக்கு முன்னாடி மசூதிக்குள்ள பலமுறை நான் போயிருந்தாலும் குழந்தைய தூக்கின்னு போறது இதுதான் முதல் முறை.
அங்கு எனக்கு முன்னாடியே சில பெற்றோர்ங்க
அவங்களோட குழந்தைய வச்சினு வரிசையா நின்னுன்னு இருந்தாங்க.
அது வரைக்கு என் மனசுல எந்த வித்தியாசமும் தெரியில.
கொஞ்சம் நேரம் கழிச்சி தொழுகைய முடிச்சிக்கின்னு வந்த இஸ்லாமிய சகோதரருங்க வரிசையில இருந்த ஒவ்வோரு குழந்தையின் நெத்தியிலையும் எதோ சொல்லிவிட்டு ஊதினாங்க.
இத பாக்கும்போது எனக்கு ஒரே ஆச்சரியம்.
காரனம்
அவங்க யாரிடமும் நிங்கள் எந்த மதம், ஜாதி, குளம் , கோத்திரம்ன்னு எந்த விவரத்தையும் கேக்கல.
ஆனால் நம்மல நம்பி வந்தவங்களுக்கு நம்ம கடவுள் மூல்யமா நல்லது நடக்கனும் ன்ற மனசு மட்டுமே அவங்ககிட்ட இருந்தத நான் பாத்தேன்
இந்த நல்ல மனசு நம்ம வழிபடுற கோவிலுங்கள்ல
இல்லனு நினைக்கும் போது எனக்கு அவமானமா இருந்துச்சி.
அவங்க நம்ம மேல அன்பு செலுத்த தயாராத்தான் இருக்காங்க.
நமக்கு தான் அதை ஏத்துக்க மனசு வரல.
இந்த குருகிய வட்டத்த விட்டுட்டு நாம வெளியவந்தோம்ன்னா நம்மள கட்டிதழுவ இந்த அன்பு நிறைஞ்ச உலகம் காத்துன்னு இருக்கு..

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval