Wednesday, April 15, 2015

6 ஜனதா கட்சிகள் இணைந்தன: புதிய கட்சியின் தலைவராக முலாயம் சிங் அறிவிப்பு

Janataparivar_2374777fஜனதா பரிவார் என்ற அமைப்பில் முன்பு இருந்த 6 ஜனதா கட்சிகள் புதிய கட்சி ஒன்றை தோற்றுவிக்க இன்று (புதன்கிழமை) ஒன்றாக இணைந்தன. புதிய கட்சியின் தலைவராக சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜனதா கட்சிகள் இணைப்புக்காக டெல்லியில் உள்ள முலாயம் சிங் யாதவின் இல்லத்தில் நிதிஷ் குமார், லாலு பிரசாத், கவுடா உள்ளிட்ட தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர்.
புதிய கட்சி உதயமாவது குறித்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் கூறும்போது, “கட்சியின் பெயர், கொடி உள்ளிட்ட இதர அம்சங்களை முடிவுசெய்ய தேவ கவுடா (மதச்சார்பற்ற ஜனதா தளம்), லாலு பிரசாத் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்) சரத் யாதவ், ராம் கோபால் யாதவ் (சமாஜ்வாதி கட்சி), ஓம்பிரகாஷ் சவுதாலா (இந்திய தேசிய லோக்தளம்) உள்ளிட்ட 6 உறுப்பினர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஒரு அமைப்பாக இணைந்துவிட்டோம்” என்றார்.
புதிய அமைப்பின் நாடாளுமன்றக் கட்சியின் தலைவராகும் முலாயம் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி குறித்து முலாயம் கூறும்போது, “வரலாற்று முக்கியத்துவம்மிக்க முடிவு இந்த இணைப்பு. ஒன்றாக இணைந்துவிட்டோம். இவர் நல்ல பிணைப்பாக இருக்கும் என்பதைமக்களுக்கு உறுதிபடத் தெரிவிக்கிறோம். மக்களின்உணர்வுகளுக்குமரியாதை கொடுப்போம்” என்றார்.
முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம்,இந்திய தேசிய லோக் தளம், சமாஜ்வாதி ஜனதா கட்சி ஆகியவை புதிய அமைப்பில் இணைந்துள்ள கட்சிகள் ஆகும்.
பிஹாரில் சட்டப் பேரவைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பலம் என்ன?
தற்போது, இந்த அமைப்பில் உள்ள கட்சிகள் வசம் 15 மக்களவை உறுப்பினர்களும், 30 மாநிலங்களவை உறுப்பினர்களும் இருப்பது கவனிக்கத்தக்கது.
இந்த புதிய அமைப்புக்கு முதல் சோதனை களமாக இருக்கப்போவது பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்தான். இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்ததேர்தல் நடக்க உள்ளது.
பல ஆண்டுகளாக பிஹாரில் எதிரும்புதிருமாக இருந்த இரு பெரும் தலைவர்களான பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் (ஐக்கியஜனதா தளம்), லாலு பிரசாதும் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்) கரம்கோத்து பாஜகவை எதிர்கொள்ள உள்ளனர். பிஹாரை தம் வசம் ஈர்ப்போம் என பாஜக தீவிரமாக களத்தில் இறங்கி உள்ளது.
2014ல் நடந்த மக்களவைத்தேர்தலில் இந்த கட்சிகளை வீழ்த்தியது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.


பாஜக தலைமையிலான மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக ஜனதா கட்சிகளும் பெரும் போராட்டம் நடத்தின. ஆனால், அப்போராட்டத்தில் காங்கிரஸ்தான் எதிர்க்கட்சிகளை ஓரணியாகத் திரட்டியது என்ற பிம்பத்தை காங்கிரஸ் ஏற்படுத்தியுள்ளது ஜனதா கட்சிகளுக்கு கோபத்தை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval