Sunday, April 19, 2015

அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக அஜ்மீர் தர்காவுக்கு காணிக்கையாக போர்வை அனுப்பிய ஒபாமா

அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக அஜ்மீர் தர்காவுக்கு காணிக்கையாக போர்வை அனுப்பிய ஒபாமாஅமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு போர்வை ஒன்றினை காணிக்கையாக அனுப்பியுள்ளார்.
அஜ்மீரில் உள்ள புகழ்பெற்ற காஜா கரிப் நவாஸ் தர்காவின் 803-ம் ஆண்டு உருஸ் விழா விரைவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில், உருஸ் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்த தர்காவில் உள்ள கோபுரத்தின் மீது போர்த்துவதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறப்பு போர்வை ஒன்றினை காணிக்கையாக அனுப்பியுள்ளார்.

அந்தப் போர்வையை அஜ்மீர் தர்காவின் தலைமை காதிமிடம் இந்தியாவுக்கான அமெரிக்க தலைமைத் தூதர் ரிச்சர்ட் வர்மா ஒப்படைத்தார்.

பிரசித்தி பெற்ற காஜா கரிப் நவாஸ் தர்காவுக்கு தெற்காசியாவைச் சேர்ந்த அனைத்து நாடுகளின் தலைவர்களும் போர்வைகளை காணிக்கையாக அனுப்புவதுண்டு. ஆனால், இந்த உருஸ் விழாவின்போது, தெற்காசியாவையும் கடந்து அமெரிக்கா முதன்முறையாக போர்வையை அனுப்பிவைத்து, ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கும் அமைதிக்கான தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளது.

உலக அமைதிக்கான அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்த முன்முயற்சி வரவேற்புக்குரியது, மிகமுக்கியமானது என போர்வையை பெற்றுக் கொண்ட அஜ்மீர் தர்காவின் தலைமை காதிம் சையத் சல்மான் சிஸ்தி குறிப்பிட்டுள்ளார்.
courtesy;malaimalar


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval