நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் கடந்த 80 ஆண்டுகளில் மிகவும் மோசமானதும் சக்தி வாய்ந்ததும் ஆகும். அதிக எண்ணிக்கையில் மக்கள் வசிக்கும் காத்மாண்டு பள்ளத்தாக்கில் நேற்று ரிக்டர் அளவில் 7.9 புள்ளிகள் கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியதோடு 1000 உயிர்களை பலிவாங்கியது. .
1900-ம் ஆண்டுக்குப் பின் இதுவரையில் மிகசக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் உலகில் எப்போது எங்கே ஏற்பட்டது என்ற விவரம் வருமாறு:
1906
ஜனவரி 21: ஈக்வடார் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ( 88.8 ரிக்டர்) சுனாமி ஏற்பட்டதில் 500 பேர் பலி.
1922
நவம்பர் 11: சிலி-அர்ஜென்டினா எல்லையை யொட்டி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் (அளவு 8.5 ரிக்டர்) சுனாமி நிகழ்ந்து சிலி கடற்கரை சேதம்.
1923
பிப்ரவரி 3: ரஷ்யா விந்தூர கிழக்கில் உள்ள கம்சக்தாவில் நிலநடுக்கம் (8.5) மற்றும் சுனாமி.
1938
பிப்ரவரி 1: இந்தோனேசியாவில் பாண்டா கடற்பகுதியில் ஏற்பட்ட 8.5 ரிக்டர் நிலநடுக்கத்தில் சிறு அளவில் சுனாமி.
1950
ஆகஸ்ட் 15: திபெத்தில் 8.6 ரிக்டர் என்ற சக்திமிக்க நிலநடுக்கத்தில் 780 பேர் உயிரிழப்பு.
1952
நவம்பர் 4: ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள கம்சத்கா பகுதியில் 9 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதிலும் உயிரிழப்பு இல்லை, ஆனால் ஹவாய் தீவில் 9.1 மீட்டர் (30 அடி) உயரத்துக்கு பேரலை உருவானது.
1957
மார்ச் 9: அலாஸ்காவின் ஆண்டிரியான் தீவில் 8.6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி காரணமாக 52 அடி உயரத்துக்கு பேரலை.
1960
மே 22: சிலியில் 9.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அதைத்தொடர்ந்து சுனாமி ஏற்பட்டு 1716 பேர் பலி
1963
அக்டோபர் 13: குரில் தீவில் 8.5 ரிக்டர் அளவில் சக்திமிக்க நிலநடுக்கத்தால் சுனாமி.
1964
மார்ச் 28: அலாஸ்காவில் உள்ள பிரின்ஸ் வில்லியம் சவுண்ட் பகுதியில் 9.2 என்ற அளவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம், சுனாமியால் 131 பேர் பலி.
1965
பிப்ரவரி 4: அலாஸ்காவின் ரேட் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் (8.7 ரிக்டர்) காரணமாக 35 அடி உயரத்துக்கு பேரலை.
2004
டிசம்பர் 26: இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுமானியில் 9.1 என பதிவான நில நடுக்கம் ஏற்பட்டு இந்தியப் பெருங்கடலில் சுனாமி உருவாகியதில் இந்தியா உட்பட 12 க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலி.
2005
மார்ச் 28: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 8.6 ரிக்டர் சக்தி கொண்ட நிலநடுக்கத்தில் 1,300 பேர் பலி.
2007
செப்டம்பர் 12: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே 8.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 25 பேர் பலி.
2010
பிப்ரவரி 27: சிலியை உலுக்கிய 8.8 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு 524 பேர் பலி.
2011
மார்ச் 11: ஜப்பானின் வடகிழக்கே 9.0 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு 18 ஆயிரம் பேர் உயிரிழப்பு
2012
ஏப்ரல் 11: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 8.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 24க்கும் மேற்பட்ட நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval