ஒரு ஊரில் பெரிய கோயிலின் கோபுரத்தில் நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன. ஒருநாள் கோயிலில் திருவிழா ஆரம்பமானது. திருவிழாவில் ஏற்பட்ட இரைச்சலினால், அங்கிருந்த புறாக்கள் வேறொரு இடம் தேடி பறந்தன.
வழியில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தை கண்டதும், புறாக்கள் அங்கே தங்கின. அது கிறிஸ்துமஸ் நேரம். ஸ்டார் கட்டுவது மற்றும் ஆலயத்தை அழகுப்படுத்தும் பணிகளால் புறாக்கள் தொந்தரவுக்குள்ளாகி, வேறொரு இடத்திற்கு இடம்பெயர்ந்தன.
வழியில் ஒரு மசூதியை பார்த்ததும், புறாக்கள் அங்கே தங்கின. அடிக்கடி நடைபெறும் தொழுகைகளால், புறாக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து, ஊரின் நடுவே இருந்த ஒரு பெரிய ஆலமரத்தில் கூடுகட்டி தங்கின.
அப்போது கீழே அதிர்ச்சியான ஒரு சம்பவத்தை புறாக்கள் கண்டன. வேறு வேறு மதத்தைச் சேர்ந்த சிலர் சண்டை போட்டுக் கொண்டு, ஒருவரையொருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தார்கள்.
ஒரு குஞ்சிப் புறா, தாய்ப் புறாவிடம், 'ஏன் இவர்கள் இப்படி சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்' என்று கேட்டது.
அதற்கு அந்த தாய்ப் புறா சொன்னது, 'நாம் கோயிலில் இருந்தபோது புறாதான், சர்ச்சில் இருந்தபோதும் புறாதான், மசூதியில் இருந்தபோதும் புறாதான்.. ஆனால், மனிதன் கோயிலுக்குப் போனால் 'இந்து', சர்ச்க்குப் போனால் 'கிறிஸ்தவன்', மசூதிக்குப் போனால் 'முஸ்லீம்'..
எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. மனிதன் தான் மதம் பிடித்து அலைகிறான்..
courtesy;facebook
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval