த.மா.கா.வின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா ஜலபதி மண்டபத்தில் இன்று நடந்தது.த.மா.கா பொதுக்குழு கூட்டம் தொடங்கியதும் கட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றது.இதில் ஜி.கே.வாசன் த.மா.கா.வின் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். உடனே பொதுக்குழு உறுப் பினர்கள் பலத்த ஆரவாரத் துடன் கரவொலி எழுப்பி னார்கள்.அதை தொடர்ந்து கட்சியின் செயல் திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
த.மா.கா.வின் முதல் பொதுக்குழு என்பதால் தொண்டர்கள் உற்சாகமாக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்திருந்தனர். மாநிலம் முழுவதிலும் இருந்து நேற்று இரவே சென்னைக்கு தொண் டர்கள் வர தொடங்கி னார்கள். கார், வேன்க ளில் தொண்டர்கள் வந்து குவிந்துள்ளனர். இன்று காலை 9 மணி முதல் பொதுக்குழு கூடிய அரங்கத்துக்குள் தொண் டர்கள் அனுமதிக்கப்பட்டனர். அரங்க வளாகத்தில் அமைக் கப்பட்டிருந்த கவுண்டர்களில் ரூ.500 செலுத்தி பொதுக்குழு உறுப்பினர்களாக தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டனர்.
சென்னை ஆழ்வார்பேட் டையில் உள்ள ஜி.கே.வாசன் வீட்டில் இருந்து வானகரம் வரை த.மா.கா. கொடி, பேனர்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு இருந்தன. கோயம்பேட்டில் இருந்து வானகரம் வரை ரோட்டின் இருபுறமும் பிரமண்டமான வரவேற்பு பேனர்கள் அமைக் கப்பட்டு இருந்தன.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval