Tuesday, April 7, 2015

10 ஆண்டுகளை கடந்த டீசல் வாகனங்களுக்கு தடை; தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

pollution carsநகரங்களில் அன்றாடம் பெருகி வரும் வாகனங்களால் காற்றின் தரம் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், பல்வேறு முயற்சிகளுக்கு பின் தேசிய பசுமை தீர்ப்பாயம் டெல்லியில் 10 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கிக் கொண்டிருக்கும் டீசல் வாகனங்களின் போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபடுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது டீசல் வாகனங்களே. தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் டெல்லியை விட்டு மக்கள் வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டு வருவதால் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பிரேசில், சீனா, டென்மார்க் போன்ற நாடுகளில் டீசல் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டை தடுக்க அவற்றிற்கு தடை விதித்தும், டீசல் வாகனங்களுக்கு கடுமையாக வரிகளை விதித்தும் மாசுபாட்டை கட்டுப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் சுவாசம் செய்வதற்கே ஒவ்வாமையை ஏற்படுத்தும் அளவுக்கு சீர்கெட்டு விடுவதற்கு முன் டெல்லிவாசிகளை காப்பாற்ற 10 ஆண்டுகளுக்கு மேலுள்ள அனைத்து டீசல் வாகனங்களும் (இலகு மற்றும் கன ரக வாகனங்கள்) தடை விதிக்கப்பட்டுள்ளன.


மேலும், அதுபோன்ற வாகனங்களின் பதிவு தகவல்களை போக்குவரத்து அதிகாரிகள் கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியிருக்கிறது. ஏற்கனவே, கடந்த நவம்பர் 26, 28 மற்றும் டிசம்பர் 4 ஆகிய தேதிகளில் டெல்லியில் காற்றின் தரம் பரிந்துரை அளவைவிட சீர்கெட்டு வருவதை சுட்டிக்காட்டியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, டெல்லி மாநகரம் இப்போது பல்வேறு நோய்களுக்கு தாயகமாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. டீசல் புகையால் நுரையீரல், மூளை பாதிக்கப்பட்டு புற்றுநோய் உண்டாக்கவும் அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval