Saturday, April 4, 2015

மேற்குவங்க குண்டுவெடிப்பு வழக்கு : காலித் முஹம்மத் அப்பாவி !

தேசிய புலனாய்வுத்துறை 'NIA' அறிவிப்பு !!
மேற்குவங்க மாநிலம் 'புர்துவான்' குண்டுவெடிப்பு வழக்கில் 17-11-2014-ல் கைது செய்யப்பட்ட ;காலித் முஹம்மத்' நிரபராதி என தேசிய புலனாய்வுப்பிரிவு அறிவித்துள்ளது.
மேற்குவங்கத்தில் கடந்த 02-10-2014ல் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ஹைதராபாத் நகரில் கைது செய்யப்பட்ட காலித் முஹம்மத், கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
தாலிபான், தஹ்ரீக் -எ- ஆசாதி உள்ளிட்ட பாகிஸ்தான் மற்றும் மியான்மர் தீவிரவாத அமைப்புக்களிடம் பயிற்சி பெற்றவர், ஆயுத தயாரிப்பில் கைதேர்ந்தவர் என்றெல்லாம் மீடியாக்களின் அவதூறுகளுக்கு ஆளான காலித், இன்று அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேற்குவங்க குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 'பதர் ஆலம் மவுலானா' என்பவரும் அப்பாவி என சமீபத்தில் விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval