Tuesday, April 21, 2015

சென்னை போக்குவரத்து தகவல்களை அளிக்கும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்

Raft  MTC Bus & Train, Chennai - Android Apps on Google Play_20150421172323சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், போக்குவரத்து தகவல்களை உள்ளடக்கிய பிரத்யேக ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.
சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த 2011ம் ஆண்டு பி.டெக். பட்டப்படிப்பு முடித்த சித்தார்த், அகிலேஷ் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் தற்போது ஐ.ஐ.டி. ரிசர்ச் பார்க்கில் தனியாக ஒரு நிறுவனத்தை தொடங்கி உள்ளனர். இவர்கள், சென்னையின் போக்குவரத்து தொடர்பான தகவல்ளை வழங்கும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை உருவாக்கி உள்ளனர்.
இதுபற்றி சித்தார்த் கூறியதாவது:-
நாங்கள் Raft (ராஃப்ட்) என்னும் ஒரு Android App-ஐ செய்து உள்ளோம். இது சென்னையின் பொது போக்குவரத்தில் பயணம் செய்பவர்களுக்கான அப்ளிகேஷன். இது, சென்னை மாநகர பஸ், உள்ளூர் ரெயில் பற்றிய வழிகள் மற்றும் நேர விவரங்களை அளிக்கும்.
இதனைக் கொண்டு பயணிகள் சென்னையில் ஓர் இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்வதற்கான அனைத்து எளிதான வழிகளை அறிந்து கொள்ளலாம். பயணிகளின் அறியாமையை நீக்கி, பேருந்து மற்றும் ரெயிலுக்காக காத்துக்கொண்டிருக்கும் நேரத்தை குறைப்பதுதான் இதன் முக்கிய நோக்கம்.
மூன்று மாதங்களுக்கு முன் கூகுள் ப்ளே ஸ்டோரில் வெளியிடப்பட்ட ராஃப்ட், தற்போது 10 ஆயிரத்துக்கும் மேலான டவுன்லோட்-களை அடைந்து 4.4 ரேட்டிங்கை பெற்றுள்ளது. http://app.letsraft.in/ link-இலிருந்து டவுன்லோட் செய்யலாம்.
3MB அளவுக்கு உட்பட்ட இந்த அப்ளிகேஷனை சாதாரண ஆண்ட்ராய்டு போனில் எளிமையான 2ஜி நெட்வொர்க்கில் பயன்படுத்தலாம்.


இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval