Friday, April 3, 2015

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கை சவுதி அரேபியா வெகுவாக குறைத்து விட்டது...

நேட்டோ படைகளை மிஞ்சும் ஒரு இஸ்லாமிய படையை சவுதி அரேபியா உருவாக்கியிருப்பதின் மூலம் அமெரிக்காவிர்கு இனி மத்திய கிழக்கில் வேலை இல்லை என்பதை சவுதி மன்னர் சல்மான் சொல்லாமல் சொல்லி சொல்லியிருக்கிறார் என்று அமெரிக்கை பத்திரிகை THE WALL STREET JOURNALதனது தலையங்கத்தில் கூறியிருக்கிறது.
இராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கவின் நடவடிக்கைகள் எதிர் பார்த்த பயனை தரவில்லை என்பதை அறிந்த பிறகே சவுதி மன்னர் சல்மான் புதிய இஸ்லாமிய கூட்டணியை உருவாக்கியிருப்பதாக கூறியிருக்கும் அந்த பத்திரிகை இதன் மூலம் மத்திய கிழக்கில் ஏக போக ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக சவுதி அரேபியா தன்னை மாற்றி கொண்டு விட்டது என்றும் இதனால் அமெரிக்காவின் முக்கியத்துவம் மத்திய கிழக்கில் வெகுவாக குறைந்து விட்டது என்றும் அந்த பத்திரிகை கூறியிருக்கிறது.
மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகள் இஸ்றேலுக்கு இணையாக ஈரானையும் வெறுக்கிறது ஈரானோடு அந்து நாடுகள் எந்த சமரச போக்கையும் விரும்பவில்லை ஆனால் அமெரிக்கா அண்மை காலங்களில் ஈரானோடு ஒரு நளின போக்கை கடைபிடிப்பதை அறிந்து பிறகே சவுதி அரேபியா இந்த முடிவுக்கு வந்திருப்பதாக அரபு லீக்கின் முன்னால் செயலாளர் அமர் மூஸா கூறியதாக அந்த பத்திரிகை மேலும் கூறியிருக்கிறது.
2003 ஆம் ஆண்டு வரை சன்னி முஸ்லிம்களின் வலுவான ஒரு பிரதிநிதியாக சதாம் உசைன் இருந்தார் சதாம் வீழ்ந்த பிறகு சன்னி முஸ்லிம்களின் பிரதி நிதித்துவத்தில் ஏர்பட்ட வெற்றிடம் நிறப்ப படாமலேயே இருந்தது இதை பயன் படுத்தி கொண்டு தான் .இஸ்லாமிய நாடுகளில் புரட்சி செய்து ஆட்சியை பிடிக்க ஈரான் முனைகிறது.
அதனால் அந்த இடம் இனியும் வெற்றிடமாக இருக்க கூடாது என்பதர்காகவும் இஸ்லாமிய நாடுகளில் புரட்சி செய்ய ஈரான் முயன்றால் ஓட ஓட விரட்டுவோம் என்பதை ஈரானுக்கு தெளிவாக புரிய வைத்திடவே சவுதி அரேபிய இந்த முயர்ச்சியில் இறங்கியிருக்கிறது.
சவுதி அரேபிய இந்த முயர்ச்சியில் முழுமையாக வெற்றி பெற்று விட்டால் மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்க முழுமையாக துடைத்து எறிய பட்டுவிடும் என்றும் அந்த பத்திரிகை மேலும் கூறியிருக்கிறது.
அமெரிக்கா இராக்கில் நடத்தும் போரில் இணைய மறுத்துவிட்ட எகிப்தை சவுதி மன்னர் சல்மான் தாம் அமைத்த கூட்டணிக்குள் கொண்டுவந்ததும் சல்மானின் சிறந்த இராஜ தந்திரத்திர்கான சான்றாக அமைந்துள்ளது எனவும் அந்த பத்திரிகை கூறியிருக்கிறது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval