Monday, March 28, 2016

பருவமடைந்திருந்தால் முஸ்லிம் பெண்கள் 15 வயதில் தங்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம்


பருவமடைந்திருந்தால் முஸ்லிம் பெண்கள் 15 வயதில் தங்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



16 வயது மகளை பையன் வீட்டார் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாகவும், தங்கள் மகளை தங்களுடனேயே அனுப்பி வைக்குமாறும் கோரி பெண்ணுடைய பெற்றோர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் எனும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ். ரவீந்திர பட் மற்றும் எஸ்.பி.கார்க் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் அவர் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது,



“இஸ்லாமிய சட்டப்படி ஒரு முஸ்லிம் பெண் பருவம் அடைந்துவிட்டால் பெற்றோரின் சம்மதம் இல்லாவிட்டாலும் அவர் தனது மனதிற்கு பிடித்தவரை மணக்கலாம் என்றும், 18 வயதிற்குட்பட்டவராக இருந்தாலும் அவர் தனது கணவர் வீட்டில் வசிக்கலாம் என்பதை இந்த நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.



அதன்படி, “பருவமடைந்த ஒரு முஸ்லிம் பெண் அதாவது 15 வயது பெண், தான் விரும்பியவரை மணக்கலாம்” என்று தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும், “தான் விரும்பித்தான் அந்தப் பையனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அதனால் அவர் மீது கடத்தல் வழக்குப் பதிவு செய்யக் கூடாது” என்றும் அந்தப் பெண் கேட்டுக் கொண்டதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

பருவமடைந்த பெண்கள் 15வயதில் திருமணம் முடிக்கலாம் என்று டெல்லிஹைகோர்ட் அளித்த இந்தத் தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒரு நல்ல தீர்ப்பாகும்.



எல்லா பிரச்சனைகளுக்கும் இதுவே காரணம்:

நாட்டில் நடக்கும் ஒழுக்க ரீதியான பல பிரச்சனைகளுக்கு, திருமணம் முடித்து வைக்க வேண்டிய வயதில் திருமணம் முடித்து வைக்காமல், தாமதமாக திருமணம் முடித்து வைப்பதுதான் காரணம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

தற்காலத்தில் குழந்தைகள் பிஞ்சிலேயே பழுத்து விடும் போது அவர்களுக்கு 20 – 25 வயதை தாண்டியவுடன் திருமணம் முடித்து வைப்பதென்பது அர்த்தமற்றதாகும்.



இப்போது உள்ள சினிமாக்களையும், சீரியல்களையும் பார்க்கக் கூடிய குழந்தைகள் பிஞ்சிலேயே பழுத்துவிடும் நிலையில், அவர்களுக்கு திருமணம் முடித்து வைக்காமல் திருமணத்தை தள்ளிப்போட்டு இழுத்தடிப்பதென்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

ஐக்கிய நாடுகள் அமைப்பான யுனிசெஃப் நடத்திய ஆய்வு முடிவு:

இந்தியாவில், 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களில், எட்டு சதவீதம் பேர், 15 வயதை அடைவதற்கு முன்பே, உடலுறவில் ஈடுபடுகின்றனர். ஆனால்,இதே பருவத்தில் உள்ள ஆண்களை பொறுத்தவரை, மூன்று சதவீதம் பேர் மட்டுமே, 15 வயதை அடைவதற்கு முன், உடலுறவில் ஈடுபடுகின்றனர் என்றும்,



பெரும்பாலான வளரும் நாடுகளிலும், கரீபியன் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், இதே போக்குதான் நிலவுகிறது என்றும், இளம் வயதிலேயே உடலுறவில் ஈடுபடுவதன் மூலம், இளம் வயதிலேயே கர்ப்பமடையும் போக்கும் அதிகரித்து உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, தாய்மை அடையும் ஒவ்வொரு 1,000 பெண்களிலும், 45 பேர், 15லிருந்து 19 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பான யுனிசெஃப்தனது ஆய்வு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டதை நாம் கண்டோம்.



மேற்கண்ட நிகழ்வுகள் பெண் குழ்ந்தைகள் பிஞ்சிலேயே பழுத்து விடுகின்றன என்பதை காட்டுகின்றதா? இல்லையா? அப்படியானால். அவர்கள் பருவமடைந்தவுடனே அவர்களுக்கு திருமணம் முடித்து வைப்பதுதானே சிறந்தது.

அப்படி திருமணம் முடித்து வைப்பதன் மூலம் இளம் வயதிலேயே வீட்டை விட்டு ஓடிப்போகும் அவலம், இளம் வயதிலேயே விபச்சாரம், மற்றும் ஒழுக்கக்கேடு குறித்த விவகாரங்களை தவிர்க்கலாம் தானே!



டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கூறிய மேற்கண்ட வழக்கில் கூட குறித்த நேரத்தில் திருமணம் செய்து வைக்காததால்தான் அந்தப் பெண் பிஞ்சிலேயே பழுத்து வீட்டைவிட்டு ஓடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.

பெண்களுக்கு தாமதமாக திருமணம் முடிப்பதென்பது, ஒழுக்க ரீதியாக மட்டுமல்ல; உடல் ரீதியாகவும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

பெண்கள் மிக தாமதமாக திருமணம் செய்துகொள்வது மற்றும் 30வயதுக்கு மேல் முதல் குழந்தை பெற்றுக்கொள்ளுவது ஆகியவைதான் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வர முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன.

தாமதமாக திருமணம் முடித்தல் என்பது உடல் ரீதியாகவும்,உளவியல் ரீதியாகவும் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.

கருத்தரிக்க தாமதம் ஏற்படும் நிலை.



அப்படியே கருத்தரித்தாலும் சுகப்பிரசவம் கேள்விக்குறி என்ற நிலை.
காலதாமதமாக திருமணமானவர்களுகு அதிகமாக சிசேரியன் பிரசவம் நடக்கிறது என்ற தகவல் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

வயது முதிர்வடையும்போது உடல் வளைந்து கொடுக்கும் தன்மையை இழக்கிறது. இடுப்பெலும்பு வளைந்து கொடுக்கும் வயதைத்தாண்டி திருமணம் செய்து கொள்ளும்போது அநேக பெண்களுக்கு `சிசேரியன்` அவசியமாகி விடுகிறது.

மேலும் இளவயதில் குழந்தை பெறும் போது நார்மல் டெலிவரியாகக்கூடிய பெண்கள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளும் போது அது சிசேரியனில் போய் முடிவதையும் காண்கின்றோம்.



தாமதமாக திருமணம் முடிப்பதனால், இப்படி ஏராளமான பிரச்சினைகளை பெண்கள் உடற்கூறு ரீதியாகவும் சந்திக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், சிறு வயதிலேயே திருமணம் முடித்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் போது அந்தக் குழந்தைகளை பேணி வளர்ப்பதும் அவர்களது பெற்றோர்களுக்கு இலகுவாகின்றது.

16 – 17 வயதில் ஒரு குழந்தையை ஒரு பெண் பெறும் போது, ஆண்குழந்தையாக இருந்தால் இவளது 40வது வயதில் அந்த ஆண்மகன் இவளுக்கு சம்பாதித்துக் கொடுக்க ஆரம்பித்துவிடுவான்.



அதே நேரத்தில் 35வயதில் ஒரு பெண் திருமணம் முடித்தால், அந்தப்பெண்ணின் 40வது வயதில் ஐந்து வயது பாலகனை பள்ளிக்கு அனுப்பிவிடும் அவல நிலையும், இவர்களுக்கு அவன் சேவை செய்ய வேண்டிய நேரத்தில், அவனுக்கு இவர்கள் சேவை செய்து கொடுக்க வேண்டிய அவல நிலையும் ஏற்படுவதற்கும் இந்த தாமத திருமணம் காரணமாக அமைகின்றதா? இல்லையா?



உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகள் ஓட்டளிப்பதற்கு தகுதி பெறும் வயது 18 என்று நிர்ணயித்துள்ள போதிலும், அதை 14வயதாக குறைக்கச் சொல்லி இப்போது கோரிக்கைகள் எழ ஆரம்பித்துள்ளன. பிரிட்டன் எம்.பி ஆலன் மைக்கேல் என்பவர், ஓட்டளிக்கும் வயதை 14 ஆக குறைக்க வேண்டும் என்ற கருத்தை சென்ற மாதம் முன்வைத்திருந்தார்.



அதுமட்டுமல்லாமல், பிரேசில், கியூபா போன்ற நாடுகளில் 16வயதிலேயே ஓட்டளிக்க அனுமதிக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பின் ஆங்கில நகலுக்கு கீழே ‘கிளிக்” செய்யவும்

courtesy;vkalathoor.in

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval