மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8–ந்தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர்.
அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. பின்னர் அந்த விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டாகி விட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை.வருகிற 8-ம் தேதியுடன் விமானம் மாயமாகி இரண்டுவருடம் ஆக உள்ளது. அந்த விமானம் இந்தியப்பெருங்கடலில் விழுந்துவிட்டது என்றும் அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் உயிரிந்துவிட்டதாக மலேசிய பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மாயமான விமானம் விபத்துக்கு உள்ளாகி விட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனினும் மாயமான விமானத்தை தேடும் பணி இன்னொரு பக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் அந்த விமானம் பற்றிய சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை.
இந்த நிலையில் மாயமான மலேசிய விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக (யுஎப்ஓ )பறக்கும் தட்டுகளை ஆய்வு செய்யும் குழு ஒன்று வெளியிட்டு உள்ளது
பறக்கும் தட்டுகளை ஆய்வு செய்துவரும் குழு ஒன்று நன்னம்பிக்கை முனை அருகே ஆய்வினை மேற்கொண்டு வந்துள்ளது. அப்போது அந்த பகுதியில் விமானத்தின் பாகங்கள் போன்ற காட்சியை காணக்கிடைத்ததாக அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நீருக்கடியில் புதையுண்ட நிலையில் காணப்படும் இந்த நிழல் மாயமான மலேசிய விமானமாக இருக்கலாம் எனவும் அந்த குழுவினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மேலும் நன்னம்பிக்கை முனை பகுதியில் கடலின் சீற்றம் வழக்கத்தைவிட அதிகமாகவே காணப்படுவதால், அப்பகுதியில் இருந்து 30-60 கிலோ மீற்றர் தொலைவுக்கு சென்றிருக்க வாய்ப்பு உண்டு எனவும் கூறுகின்றனர்.
மேலும் நன்னம்பிக்கை முனை பகுதியில் கடலின் சீற்றம் வழக்கத்தைவிட அதிகமாகவே காணப்படுவதால், அப்பகுதியில் இருந்து 30-60 கிலோ மீற்றர் தொலைவுக்கு சென்றிருக்க வாய்ப்பு உண்டு எனவும் கூறுகின்றனர்.
சமீபத்தில் ஆப்பிரிக்காவின் மொசாம் பிகு என்ற கடற்கரை பகுதியில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும். அந்த பாகங்களை ஆய்வுக்காக மலேசியாவிற்கு அமெரிக்க அதிகாரிகள அனுப்பி வைத்துள்ளனர் என்றும் கூறப்பட்டது., இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாகம் போயிங் 777 ரக விமானத்தை சேர்ந்தது என்பதால், இது எம்எச்370 விமானத்தின் பாகங்களாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடதக்கது.
- See more at: http://www.canadamirror.com/canada/58343.html#sthash.sdeBEzp2.zxRcSpL1.dpuf
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval