Sunday, March 6, 2016

ஐ.என்.எஸ். விராத் கடற்படை போர் கப்பலில் தீ விபத்து, என்ஜினியர் உயிரிழப்பு


INS_Viraat_VPXLஐ.என்.எஸ். விராத் போர் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் கடற்படை தலைமை என்ஜினியர் உயிரிழந்தார்.
கோவா கடற்பகுதியில் ஐ.என்.எஸ். விராத் போர் கப்பல் நேற்று மாலை வழக்கமான பணியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது கப்பலின் பாய்லர் அறையில், நீராவி கசிவை தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. கப்பலில் இருந்த வீரர்கள் போராடி உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பாய்லர் அறையில் இருந்து வெளியே வந்த புகையினை சுவாசித்த 4 மாலுமிகள் காயம் அடைந்தனர் என்று அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாதிக்கப்பட்ட கடற்படை தலைமை மெக்கானிக் என்ஜினியர் அசு சிங் கோவாவில் உள்ள கடற்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அவருக்கு அப்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
மற்ற மாலுமிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களுக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாய்லர் அறையில் கிடந்த எரியும் தன்மை கொண்ட பொருட்களால் தீ விபத்து நேரிட்டு இருக்கலாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய கப்பல் படையில் புராதனமான இடத்தை பிடித்த ‘ஐ.என்.எஸ். வீராட்’ போர்க்கப்பல் ராணுவத்தில் இருந்து கடந்த வருடம் ஓய்வு பெற்று விட்டது. ராணுவத்தில் 60 ஆண்டு காலம் இக்கப்பல் பணியாற்றி உள்ளது. 30 ஆண்டு காலம் இங்கிலாந்து படையில் இருந்த இந்த கப்பல் 1987–ம் ஆண்டு இந்திய கப்பல் படையில் சேர்க்கப்பட்டது. விமானம் தாங்கிய இந்த போர் கப்பல் இப்போது மும்பை கடற்பகுதியில் உள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval