Wednesday, March 16, 2016

68 சதவீத பால் தரமானதாக இல்லை; கலப்படமும் அதிகம் பாராளுமன்றத்தில் மந்திரி திடுக்கிடும் தகவல்


milkபாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி ஹர்ஷவர்தன் பதில் அளித்து பேசுகையில் பாலில் செய்யப்படும் கலப்படம் குறித்து சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
நாட்டில் அன்றாடம் வினியோகிக்கப்படும் பால் குறித்து உணவுப் பொருள் ஒழுங்குமுறை அமைப்பினர் நடத்திய ஆய்வில் 68 சதவீத பால் தரமானதாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது. தவிர, பாலில் உடலுக்கு கேடு விளைவிக்கும் சோப்புத் தூள், காஸ்டிக் சோடா, குளுக்கோஸ், வெள்ளை பெயிண்ட், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் போன்றவை கலப்படம் செய்யப்படுகின்றன.
தற்போதுள்ள நவீன ஸ்கேனர் கருவிகள் மூலம் 40 வினாடிகளில் பாலில் கலப்படம் உள்ளதா என்பதையும், எந்த அளவிற்கு அதில் கலப்படம் இருக்கிறது என்பதையும் துல்லியமாக கண்டுபிடித்து விடலாம்.
ஒவ்வொரு எம்.பி.யும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த நவீன ஸ்கேனர்களை வாங்கிக் கொள்ளலாம். ஸ்கேனர் விலை அதிகமாக இருந்தாலும் கூட ஒருமுறை சோதனை நடத்த 10 பைசாதான் செலவாகும். விரைவில் ஜி.பி.எஸ். கருவிகள் மூலம் பால் எங்கிருந்து வினியோகம் செய்யப்படுகிறது, கேன்களில் அடைக்கப்பட்ட பாலில் கலப்படம் செய்யப்படுகிறதா? என்பதை கண்டறியும் முறை அமலுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval