Saturday, March 12, 2016

பழைய வாட்ஸ் அப் உரையாடல்களை எவ்வாறு புதிய மொபைலுக்கு மாற்றுவது?


apple-imessage-vs-whatsapp-which-messaging-application-reigns-supreme copyஉலகில் 100 கோடிக்கும் அதிகமானவர்களால் வாட்ஸ் அப் உபயோகிக்கப்பட்டு வருகிறது. பல முக்கிய தகவல்களை நாம் வாட்ஸ் அப் மூலமாக பரிமாறி வருகிறோம். அப்படி சேமித்து வைத்த முக்கியமான வாட்ஸ் அப் டேட்டாக்களை வேறு மொபைலுக்கு நாம் மாறும் போதும் நமக்கு தேவைப்படலாம், அந்த உரையாடல்களை எவ்வாறு புதிய மொபைலுக்கு மாற்றுவது என்பதை தெரிந்து கொள்வோம்.
ஐ.போன் பயனர்கள்:
ஐ-போனில் உள்ள வாட்ஸ் அப் டேட்டாக்களை மிகவும் சுலபமாக ஐ.கிளவுட் மூலமாக நாம் சேமிக்கலாம். இதற்காக கீழ்க்கண்டவாறு செட்டிங்ஸ்களை செலக்ட் செய்ய வேண்டும்.
Whatsapp settings>> Chats>> chat backup
புதிய ஆப்பிள் மொபைல் வாங்கி, வாட்ஸ் அப் இன்ஸ்டால் செய்த பிறகு, உங்களது மொபைல் எண்ணை எண்டர் எய்த பின்பு பழைய வாட்ஸ் அப் டேட்டாக்களை திரும்பப் பெரும் ஆப்ஷன் கிடைக்கும், அதை செலக்ட் செய்யும் போது  பழைய வாட்ஸ் அப் உரையாடல்களை நாம் திரும்பப் பெறலாம்.
ஆண்ட்ராய்ட் பயனர்கள்:
ஆண்ட்ராய்ட் உபயோகிப்பாளர்கள் பல வழிகளில் வாட்ஸ் அப் டேட்டாக்களை திரும்பப்பெரும் வசதி உள்ளது.
மைக்ரோ SD கார்டு:
ஆண்ட்ராய்ட் உபயோகிப்பாளர்கள் மைக்ரோ SD கார்டுகளில் தங்களது வாட்ஸ் அப் உரையாடல்களை பேக் அப் செய்து பின்னர் புதிய மொபல்களில் திரும்பப் பெறலாம்.
கணிப்பொறியில் சேமிக்கலாம்:
மைக்ரோ sd கார்டில் சேமிக்க முடியாதவர்கள், தங்களது கணிப்பொறி அல்லது லேப்டாப் மூலமாக வாட்ஸ் அப் உரையாடல்களை சேமிக்கலாம், அதற்கு முதலாவதாக உங்களது போனை கணிப்பொறியுடன் usb கேபிள் மூலமாக இணைத்து, அதில் தோன்றும் வாட்ஸ் அப் ஃபோல்டரை, கணிப்பொறியில் சேமித்து வைத்து, பின்னை புதிய மொபைலை இவ்வாறாக இணைத்து அந்த ஃபோல்டரை புதிய போனின் வாட்ஸ் அப் ஃபோல்டரில் பேஸ்ட் செய்வதன் மூலம் நாம் பழைய உரையாடல்களை திரும்பப் பெறலாம்.
கூகுள் டிரைவ்:
வாட்ஸ் அப் உரையாடல்களை திரும்பப் பெறும் மற்றொறு மிகச் சுலபமான வழி கூகுள் டிரைவ். வாட்ஸ் அப் டேட்டாக்களை கூகுள் டிரைவில் சேமித்துவிட்டு பின்னர், வேறு ஆண்ராய்ட் மொபைலில் நமது வாட்ஸ் அப் அக்கவுண்டை கட்டமைக்கும் போது பழைய உரையாடல்களை திரும்பப் பெறலாம்.

வாட்ஸ் அப் டேட்டாக்களை திரும்பப் பெரும் போது, மொபைல் டேட்டாவை விட
வைஃபை உபயோகித்தால் விரைவாக பரிமாற்றம் நடக்கும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval