Wednesday, March 16, 2016

சவூதி அரேபியாவுக்கு பெண்கள் மட்டுமே இயக்கிய முதல் விமானம்: சரித்திரத்தில் ஒரு மைல்கல்

bruine_flightப்ரூனே நாட்டில் இருந்து சவூதி அரேபியாவுக்கு பெண்கள் மட்டுமே இயக்கிய விமானம் முதல் முறையாக வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
பெண்கள் வாகனம் ஓட்டுவதே குற்றமாகக் கருதப்படும் சவூதி அரேபியாவுக்குராயல் ப்ரூனே ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்றுமுழுக்க முழுக்க பெண் விமானிகளைக் கொண்டு இயக்கப்பட்டு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இது வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
ப்ரூனேவின் தேசிய தினம் கொண்டாப்படுவதை முன்னிட்டுஅந்நாட்டின் பெண் கேப்டன் விமானி ஷரிபாஹ் க்ஸரீனா சுரைனிமூத்த மற்றும் முதல் அதிகாரியான டிகே நாடியா பிக் கஷீம் மற்றும் மூத்த மற்றும் முதல் அதிகாரி சரியனா நோர்டின் ஆகியோர் இந்த விமானத்தை இயக்கினர்.
ஷரிபா க்ஸரினாஅந்நாட்டின் முதல் பெண் விமானியாக பதவியேற்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஒரு பெண்ணாகப்ரூனியன் பெண்ணாக இதனை மிகப்பெரிய சாதனையாகக் கருதுகிறேன். இளைஞர்கள் குறிப்பாக பெண்கள்தாங்கள் என்னவாக வேண்டும் என்று கனவு காண்கிறார்களோ,அதை நிச்சயம் நிறைவேற்ற முடியும் என்று ஷரிபாஹ் கூறினார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval