Tuesday, March 1, 2016

‪ஓர் உடல்நல பகிர்வு‬

ஒவ்வொரு மீனுக்கும் சில மருத்துவ குணங்கள் உள்ளது, அந்த வகையில் கானாங்கெளுத்தின் மீன் சாப்பிட்டால்
‪#‎இதய_நோய்கள்_தடுக்கப்படும்‬ இதில் ஒமோக-3 ஃபேட்டி அமிலம் அதிகம். மெலும் மோனோ சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் மட்டுமின்றி, சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவாக உள்ளது. எனவே இம்மீனை அடிக்கடி உட்கொண்டு வர, இதய பிரச்சனைகளான பக்கவாதம், பெருந்தமனி தடிப்பு, மாரடைப்பு போன்றவை வரும் வாய்ப்பு குறையும்
‪#‎நீரிழிவு_நோய்_குறையும்‬ வளமான அளவில் நல்ல கொழுப்புக்களான மோனோ-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் உள்ளன. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கலாம்
‪#‎இரத்த_அழுத்தம்_கட்டுப்பாட்டுடன்_இருக்கும்‬ உயர் இரத்த அழுத்தம் இருந்தால் கானாங்கெளுத்தி மீனை அடிக்கடி சாப்பிடுங்கள். ஏனெனில் இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இச்சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்
‪#‎மூட்டு_பிரச்சனைகள்‬ மூட்டு பிரச்சனைகளைத் தடுக்கும் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் அதிகம் உள்ளது. ஆகவே இதனை உணவில் அடிக்கடி உட்கொண்டு வர, மூட்டு பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்
‪#‎குடல்_புற்றுநோய்‬ மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத வைட்டமின் டி அதிகம் உள்ளது. இதனை புற்றுநோய் உள்ளவர்கள் உட்கொண்டு வந்தால், குடல் புற்றுநோயுடன் உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் கானாங்கெளுத்தியை உட்கொண்டால் வாழ்நாளின் அளவை நீட்டிக்கலாம்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval