Tuesday, March 29, 2016

தமாகா-வுக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கீடு


சென்னை: வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் 4 தென்னை மரங்கள் அடங்கிய சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார். செய்தியாளர்கள் மத்தியில் தங்கள் கட்சி சின்னத்தை ஜி.கே. வாசன் அறிமுகப்படுத்தி பேசினார்.

இதற்கு முன்பு கடந்த 1996, 2001 சட்டமன்ற தேர்தல்களிலும், 1998 மற்றும் 1999 நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், கடந்த 2003-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்தது. கடந்தாண்டில் காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட பிறகு மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை வாசன் துவக்கினார்.

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெறுமா அல்லது மக்கள் நலக் கூட்டணி, திமுக போன்று வேறு கூட்டணிகளில் தமாகா சேருமா என்ற கேள்வி எழுந்துல் நிலையில், தொண்டர்களை தேர்தலுக்கு தயாராகுமாறு வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
courtesy;samayam


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval