Tuesday, March 15, 2016

செல்போன்களில் 3 ‘ஆப்ஸ்’களை பயன்படுத்த ராணுவம் தடை

201603160358201631_Mobile-phones-3-apps-to-Military-bans-use_SECVPF
நவீன செல்போன்களில் ‘வீசாட்’, ‘லைம்’, ‘ஸ்மெஷ்’ ஆகிய ‘ஆப்ஸ்’கள் (பயன்பாடு) பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. இதில் ‘ஸ்மெஷ் ஆப்ஸ்’ வாயிலாக இந்திய ராணுவத்தினரை பாகிஸ்தான் ராணுவம் உளவுபார்ப்பதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இந்தியாவின் ராணுவ ரகசிய தகவல்கள், இந்திய ராணுவம் மேற்கொள்ளும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், எல்லையில் உள்ள ராணுவ வீரர்களின் நடவடிக்கைகள், உயர் ராணுவ அதிகாரிகள் பற்றி தகவல்களை பாகிஸ்தான் ராணுவம் உளவுபார்த்து வருகிறது. ‘ஸ்மெஷ் ஆப்ஸ்’ மூலமாக தான் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உளவு பார்த்து ஜனவரி மாதம் பதன்கோட் விமானப்படை தளம் மீது தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
மேலும் ‘வீசாட்’, ‘லைம் ஆப்ஸ்’கள் மூலமாக இந்திய ராணுவம் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள், வரைபடங்களை பாகிஸ்தான் உளவுபார்ப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்த 3 ‘ஆப்ஸ்’களுக்கும் ராணுவம் தடை விதித்து கருப்பு பட்டியலில் வைத்துள்ளதுடன், முப்படை ராணுவத்தினரும் இந்த ‘ஆப்ஸ்’களை நீக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
இதனிடையே கூகுள் வலைதளம் இந்த ‘ஆப்ஸ்’களை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval