Saturday, March 12, 2016

இன்டர்நெட்டின் இருண்ட பகுதி: டீப் வெப், டார்க் வெப்.

Deep web இன்று நாம் அறிந்து வைத்திருக்கும் இன்டர்நெட் என்பது மொத்த இனையதளத்தின் ஒரு சிறு பகுதி தான். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் ஒரு கடற்கரையில் இருந்து நாம் கடலை காண்கிறோம் என்றால் நம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலானது நாம் அறிந்திருக்கும் இன்டர்நெட். இவை தான் நாம் பொதுவாக பயன்படுத்தும் தேடுபொறிகளில் (SEARCH ENGINES) பட்டியலிடப்பட்டு இருக்கும். ஆனால் பிரபலமான தேடுபொறிகளான கூகிள், பிங், யாகூ போன்றவற்றின் கண்களுக்கு சிக்காதவை அந்த கண்ணுக்கெட்டிய தூரத்தையும் தாண்டி இருகின்றது. இந்த, பரவலான தேடுபொறிகளில் பட்டியலிடப்படாத இணையதள பக்கங்கள் மற்றும் தகவல்களை  டீப் வெப் என்கிறோம். இவை நாமறிந்த இன்டர்நெட்டை விட சுமார் 500 மடங்கு பெரியது.
அடுத்ததாக டார்க் வெப். டார்க் வெப் என்றால் என்ன? டீப் வெப் என்பது நம் கண்ணனுக்கு எட்டாத கடலின் பரப்பளவு என்று வைத்துக்கொண்டால் டார்க் வெப் என்பது ஆழ் கடல் எனக் கூறலாம். இங்கே நாம் யார் என்பதை வெளிப்படுத்தாமல் ஆனாமதேயராக (Anonymous) செயல்படலாம். இணையதள குற்றங்கள் பல இங்கு தான் நடக்கின்றன. பெரும்பாலும் போதைப் பொருள் விற்பனை முதல் கூலிப்படைகள் வரை பல சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் இங்கு நடைபெறுகிறது. இதனாலேயே டார்க் வெப் என்றால் சட்டத்திற்கு புறம்பானதோ என்ற எண்ணமும் சேர்ந்தே ஒட்டிக்கொள்ளும்.
ஆனால் டார்க் வெப் என்றாலே சட்ட விரோத செயல்கள் தான் என்றும் எண்ணிவிட வேண்டாம். தற்போதைய இணையதளங்கள் தங்கள் பயனாளர்களின் தகவல்கள் மீது தீராப் பசியுடன் இருக்கின்றன. உங்களைக் குறித்து ஒரு சிரிய தகவலைக் கூட விட்டுவைக்க விரும்புவதில்லை இத்தகைய நிறுவனங்கள். மொபைல் போனில் நீங்கள் எடுக்கும் உங்கள் போடோக்களை சேமித்து வைக்க எல்லையற்ற சேமிப்பு இடங்களை தங்கள் சர்வர்களில் பிரபல நிறுவனங்கள் தருகிறது என்றால் அது அவர்களின் தொழிலுக்கான முதலீடு. இத்தகைய நிறுவங்களின் பார்வையில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களும், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அரசு கட்டுப்பாட்டினால் இணையதளத்தை சரியாக பயன்படுத்த முடியாதவர்களும், தங்களிடம் தகவல் தருபவர்களின் அடையாளத்தை மறைமுகமாக வைக்க நினைக்கும் பத்திரிகையாளர்களும் கூட இந்த டார்க் வெப்பை பயன்படுத்துகிறார்கள்.
பெரும்பாலான டார்க் வெப் தளங்கள் .onion என்று முடிவுறும். இது TOR சேவையின் ஒரு அங்கம். . இந்த டார்க் வெப் தளங்களை TOR இன் மற்றொரு சேவையான ஆனியன் பிரவ்சர் (The Onion Browser)மூலமே பயன்படுத்த இயலும். TOR என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு, உங்களின் இருப்பிடத்தை IP முகவரி மூலம் தெரியப்படுத்தாமல் ரகசியாமாக இணையதளத்தை பயன்படுத்த உதவும் ஒரு இணையதள சேவை. இது முற்றிலும் சட்டத்திற்கு உட்பட்டதே. தங்களின் பாதுகாப்பு குறித்து கூடுதல் அக்கறை உள்ளவர்கள் பெரும்பான்மையாக TOR சேவையை பயன்படுத்துவர். மேலும் சில நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தடை செய்யப்படும் இணையதளங்களை பார்வையிட சிலர் பயன்படுத்துவார்கள். TOR சேவை அதன் பயனாளியை ஒரு IP முகவரியுடன் இணைக்காததால் அதன் பயனாளிகள் எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டின் பூலோக எல்லைகளுக்குள் அடங்க மாட்டார்கள். சமீபத்தில் அரசு எந்திரங்கள் இணையதளத்தில் உலாவும் பொதுமக்களை உளவு பார்கின்றது என்று எட்வர்ட் ஸ்னோடன் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவுடன் TOR பொதுமக்களின் கவனத்தை பரவலாக ஈர்க்க தொடங்கியது
சரி இந்த டீப் வெப் தளங்களை தேடுவது எப்படி?
முன்பே கூறியது போல் இந்த டீப் வெப் தளங்கள் பிரபல தேடுபொறிகளில் தேடினால் கிடைக்காது. அல்லது அந்த தேடுபொறிகளால் பட்டியலிடப்படாமல் இருக்கும். ஆனால் இத்தகைய டீப் வெப் தளங்களை தேடுவதற்கென்றே சில தேடு பொறிகள் இருக்கின்றன.
அவை
போன்றவையாகும். அதே போல டார்க் வெப் தளங்களில் தேட
போன்ற தளங்கள் இருக்கின்றன.
மேலும் பயனாளர்கள் பற்றிய தகவல்களை சேமிக்காத தேடு பொறிகள் என
போன்ற தளங்கள் செயல்பட்டு வருகின்றன.இணையதளத்தில் நல்லவை தீயவை எவை எவை என்று அறிந்து கொண்டு தீயதை விட்டும் விலகி பாதுகாப்பாக உலாவுங்கள்.
TOR மென்பொருள் பதிவிறக்கம் செய்ய
https://www.torproject.org/download/download.html.en
Thanks To  Puthiya Vidiyal

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval