Wednesday, March 2, 2016

இந்தோனேஷியாவில் 7.9 ரிக்டர் அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

earthquake-hits-indonesia-22-467x278
இந்தோனேஷியாவில் 7.9 ரிக்டர் அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்தோனேஷியாவின் தென்மேற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சுமத்ரா தீவிற்கு மேற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேற்கு சுமத்ரா, வடக்கு சுமத்ரா, ஆஷ் ஆகிய பகுதிகளுக்கு முதல் கட்டமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. படாங்கில் இருந்து தென்மேற்கே 808 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளிவரவில்லை, சேதங்கள் இருக்கக்கூடும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்தியாவிற்கு ஆபத்து இல்லை
இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளநிலையில், இந்தியாவிற்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஐதராபாத் நகரில் உள்ள சுனாமி முன்னெச்சரிக்கை மையம் இந்தியாவை தற்போது சுனாமி தாக்குவதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்படும் பாதிப்பை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval