Tuesday, September 20, 2016

காஞ்சிபுரம் அருகே பரிதாபம்: பெண் விஏஓ குடும்பத்துடன் தற்கொலை - 4 சடலங்களை மீட்டு போலீஸ் விசாரணை



காஞ்சிபுரம் அருகே காட் டுப்பட்டூர் கிராமத்தில் பெண் கிராம நிர்வாக அலுவலர் குடும் பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள து.
காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் அருகே உள்ள காட்டுப்பட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மாரி. விவசாயத் தொழிலாளி. இவருடைய மனைவி சரஸ்வதி, மகள் இந்துமதி (29), மகன் காமேஷ் (21). கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இந்துமதிக்கு கிராம நிர்வாக அலு வலர் பணி கிடைத்தது. இதில் சேர்ந்த அவர் காட்டுப்பட்டூர் கிராமத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் இருந்தபடி சுற்றுவட்டா ரத்தில் உள்ள பல்வேறு கிராமங் களில் பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது மதுரமங்கலம் பிர்கா 1-ல் கிராம நிர்வாக அலுவல ராக பணியாற்றினார். இவருடைய தம்பி காமேஷ் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து, கடந்த 2 ஆண்டுகளாக வேலை தேடி வந்தார்.

இந்நிலையில், நேற்று இந்து மதியின் வீடு திறந்த நிலையில் கிடந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் அவரை பார்ப்பதற் காகச் சென்றனர். வீட்டினுள், இந்துமதி தரையில் விழுந்த நிலையிலும், அவரது பெற்றோர் தம்பி 3 பேரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்த நிலையிலும் சடலமாக தொங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத் தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத் துக்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் சடலங்களை சோதனை செய்தனர். அப்போது இந்துமதி விஷம் அருந்தி தற் கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து, 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொ டர் பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து, போலீஸ் வட்டா ரங்கள் கூறியதாவது: கிராம நிர்வாக அலுவலரின் தற்கொ லைக்கான காரணங்கள் தெரி ய வில்லை. பணி தொடர்பான பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது குடும்ப பிரச்சினை காரணமா என விசாரித்து வருகிறோம். மேலும், இந்துமதிக்கு திருமணம் செய்வ தற்காக அவரது பெற்றோர்கள் வரன் தேடி வந்ததாக தெரிகிறது. இதில் ஏதேனும் பிரச்சினையா எனவும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

உத்திரமேரூர் பகுதியில் ஆக்கிரமிப்பு புகார் தெரிவித்த கிராம நிர்வாக அலுவலரை, நேற்று முன்தினம் கார் ஏற்றி கொல்ல முயற்சிகள் நடைபெற்றன. இந் நிலையில் மதுரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் குடும் பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அடுத்தடுத்த சம்பவங்களால் அப்பகுதியில் பரப ரப்பு நிலவுகிறது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval