செத்து பிழைத்து வந்தேன்....' இந்த வார்த்தை எளிதாக ஒருவரது வாழ்வில் வந்துவிடாது. சென்டிமீட்டர் தூரத்தில் விபத்தில் இருந்து தப்பியவர்கள் பலரை நாம் பார்த்திருப்போம். ஏன், நீங்களே கூட இந்த சம்பவத்தை கடந்து வந்திருக்கலாம்.
ஆனால், சிங்கம், புலி போன்ற காட்டு விலங்குகளிடம் சிக்கி, தப்பி பிழைத்து வருவது என்பது லேசுப்பட்ட காரியம் அல்ல. நினைக்கும் போதே நெஞ்சு படபடக்க ஆரம்பித்துவிடும். ஆனால், புலியிடம் சிக்கி, அடிவாங்கி ஒருவர் உயிர் பிழைத்து வருவது என்பது எமனிடம் ஆட்டோகிராப் வாங்கிவிட்டு வருவது போல.
வங்காள தேசத்தை சேர்ந்த ஓர் நபர் நேர்ந்த இந்த கொடுமையான சம்பவம், உண்மையிலேயே யாருக்கும் நேர்ந்துவிட கூடாது....
ஹாஷ்மோத் அலி தென் வங்காள தேச பகுதியில் வாழ்ந்து வருகிறார். இவர் 20 வருடங்களுக்கு முன்னர் ஒரு புலியால் தாக்கப்பட்டார்.
இவர் வாழ்ந்து வரும் பகுதியில் புலிகள் அதிகமாக நடமாடுவது வழக்கம். இங்கு புலியால் தாக்கப்படும் சம்பவங்களும் மிக சாதாரணமாக நடக்கின்றன.
தென் வங்காள தேச பகுதியில் இருக்கும் இந்த கிராமத்தில் புலிகள் மிக சாதாரணமாக கண்ணில் தட்டுப்படும். யாரும் இங்கு புலிகளால் தாக்கபடுவதை குற்றம் சொல்ல முடியாத சூழலில் இருந்து வருகின்றனர். சொல்லப்போனால் அவர்கள் பயந்து தான் வாழ்ந்து வருகின்றனர்.
ஹாஷ்மோத் அலி புலியால் பலமாக தாக்கப்பட்டார். இதில், இவரது முகத்தின் ஒரு பகுதியே சிதைந்து போனது.
இவருக்கு இப்போதும் நினைவிருப்பது. அடிவயிற்றில் இருந்து இவர் கத்தியதும், புலியின் கால் பிடியில் இருந்து இவர் தப்பியது மட்டுமே.
இவரது அருகில் இருந்த மக்கள் சற்று தைரியமாக இருந்து, புலியை பயமுறுத்தி விரட்டினர். புலியும் பயந்து ஓடியது. ஆனால், இவரது முகம் முற்றிலுமாக அகோரமாக மாறிப்போனது.
புலியிடம் இருந்து ஹாஷ்மோத் அலியால் உயிரை மட்டும் தான் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது, முகத்தை அல்ல.
இருபது வருடங்களாக தனது முகத்தை மறைத்துக் கொண்டு தான் வியாபாரம் செய்து வருகிறார் ஹாஷ்மோத் அலி.
கிராம மக்கள் தனது முகத்தை கண்டு அஞ்சுவார்களோ என்ற அச்சத்தில் இவர் பல காலம் தன் முகத்தை வெளிக் காட்டாமலேயே இருந்தார். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார் ஹாஷ்மோத் அலி.
கடைசியாக வெளியே வந்தே ஆகவேண்டும் என்ற சூழலில். தனது முகத்தை வெளிக்காட்ட துவங்கினார் ஹாஷ்மோத் அலி.
இப்போது இவரது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தனது குழந்தைகளுக்கு ஒரு சிறந்த ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார் ஹாஷ்மோத்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval