Thursday, September 22, 2016

உலகின் நீளமானஉலகின் நீளமான சுரங்க ரயில் பாதை சுவிஸில் திறப்பு !சுவிஸில் திறப்பு !

உலகின் நீளமான சுரங்க ரயில் பாதை சுவிஸில் திறப்பு !உலகின் மிக நீளமான சுரங்க ரயில் பாதை இன்று சுவிட்சர்லாந்தில் திற்க்கப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தின் கோட்ஹார்ட் பகுதியில் இருந்து , தெற்கு மாகாணமான டின்சினோகான்டன் பகுதி வரை 57 கி.மீ.தொலைவிற்கு ஆல்ப்ஸ் மலையை குடைந்து ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. துவக்க விழாவில் சுவிட்சர்லாந்து அதிபர் யோகன் ஸ்னைடர், பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலாண்டே, ஜெர்மன் சானசலர் ஏஞ்சலா மெர்க்கல், இத்தாலி பிரதமர் மெட்டீயோ ரெயின்ஸி ஆகியோர் கலந்து கொண்டு ரயிலில் பயணித்தனர்.
ரயில் பாதை இன்று திறக்கப்பட்டாலும், பொதுமக்களுக்கான சேவை டிசம்பர் மாதம் முதல் தொடங்கப்படும்.
இதற்கு முன்னதாக, ஜப்பான் நாட்டில் உள்ள Seikan என்ற சுரங்க வழி ரயில் பாதை(53 கி.மீ) தான் உலகின் மிக நீளமான சுரங்க வழி ரயில் பாதையாக இருந்தது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval