வீடுகளின் அழகை அதிகரித்துக் காட்டுவது பசுமையாக இருக்கும் தாவரங்களாக மட்டும் தான் இருக்க முடியும். எனவே மாடியில் தோட்டம் போடுவதால் வெயில் காலத்திலும் வீடு சில்லுனு இருப்பதை உணரலாம்.
சுத்தமான காற்று, பசுமை, குளுமை இவை எல்லாம் நமக்கு இலவசமாக கிடைக்கும். எனவே உங்கள் வீட்டு மாடி தோட்டத்தை பாதுகாப்பதற்கான சூப்பரான டிப்ஸ்!
* மண் தொட்டியில் செடியை நடுவதற்கு முன், அதில் உருவாகும் உப்பு படிவை நீக்க, வெள்ளை வினிகர், ரப்பிங் ஆல்கஹால் மற்றும் தண்ணீர் போன்றவற்றை சரிசமமான அளவில் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, பின் இதனை தொட்டியின் மீது தெளித்து, பிளாஸ்டிக் பிரஷை கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும்.
* செடிகளை ட்ரிம் செய்யும் கருவி பழுதடையாமலும் உடையாமலும் இருக்க, அந்தக் கருவியை பயன்படுத்துவதற்கு முன், அதன் மீது சிறிதளவு எண்ணெய்யை தேய்க்க வேண்டும்.
* நீண்ட கருவி அல்லது கம்பி குச்சியை அளவு கோலாக பயன்படுத்துங்கள். நீண்ட கைப்பிடி கொண்ட தோட்ட கருவி ஒன்றினை தரை மீது வைத்து. பின் ஒரு குறிப்பிட்ட இடைவெளி விட்டு செடிகளை நட வேண்டும்.
* தோட்டத்திற்கு தேவையான நூல் கயிற்றை எடுத்துக் கொண்டு கயிற்றின் ஒரு முனையை வடிகால் துளையின் வழியாக இழுத்து, பின் தோட்டத்தில் உள்ள தொட்டியை தலைகீழாக வைத்து விட வேண்டும்.
* சிறிய களிமண் தொட்டிகளை பயன்படுத்தினால், அது இரவு நேரம் ஏற்படும் உரை பனியிலிருந்து, செடிகளை கண்ணாடி மூடியாக இருந்து பாதுகாக்கும்.
* களிமண் தொட்டியை நெளிவுக்குழாய் வழிகாட்டியாக மாற்ற, தோராயமாக 1 அடி நீளமுள்ள இரும்பு கம்பியை தோட்டத்தின் மண் மீது ஊன்றி, அதன் மீது இரண்டு களிமண் தொட்டிகளை கவிழ்த்தி வைக்கவும். அதில் ஒன்று தரையை நோக்கி இருக்க வேண்டும், மற்றொன்று வானை நோக்கி இருக்க வேண்டும். இதனால், நெளிவுக்குழாயை மண்ணோடு சேர்த்து இழுக்கும் போது, உங்கள் செடிகளுக்கு பாதிப்பு ஏற்படாது.
* இயற்கையான செடிகளின் பெயர்களை, நிரந்தர மார்க்கரை கொண்டு, தட்டையான கற்களில் எழுதி அவைகளை அந்தந்த செடிகளின் கீழ் வைத்து விடுங்கள். இதனால் செடிகளின் பெயர்களை எளிதில் அறிந்துக் கொள்ள உதவும்.
* செடிகள் அசுணிகளால் பாதிக்கப்பட்டால், அதனை கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லி மருந்தை பயன்படுத்த வேண்டும்.
* காய்கறிகளை வேக வைக்கும் போது, அந்த தண்ணீரை கீழே ஊற்றாமல், உங்கள் வீட்டு செடிகளின் தோட்டத்தில் ஊற்றவும். இதனால் செடிகள் நல்ல வளமையாக வளரும்.
* வடி கட்டிய டீத்தூள் அல்லது காபி கொட்டையை, மாதம் ஒரு முறை ஒரு கை அளவுக்கு லேசாக தூவினால் செடிகளின் மண் அமிலமாக்கப்பட்டு மண்ணின் அமிலத்தன்மை சிறப்பாக இருக்கும்.
* சீமைச்சாமந்தி தேநீரை செடிகளுக்கு பயன்படுத்தி வந்தால் இளம் செடிகளை உடனே தாக்குகின்ற பூஞ்சைகள் உருவாவதை தவிர்க்கலாம். மேலும் வாரம் ஒரு முறை சிறிதளவு தேநீரை செடியின் மண் பரப்பில் ஊற்றி வரலாம்.
-
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval