Friday, September 16, 2016

மனைவி சடலத்துடன் நடந்த நபருக்கு பஹ்ரைன் பிரதமர் அளித்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா?

ஒடிசாவில் மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து 12 கிலோ மீற்றர் தொலைவு நடந்த தானா மஜ்கிக்கு பஹ்ரைன் பிரதமர் 9 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
ஒடிசாவில் கலாகண்டி மாவட்டத்தில் மெல்கர் கிராமத்தை சேர்ந்தவர் தானா மஜ்கி. இவரது மனைவி அமாங் தை (42) காசநேயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த ஆகஸ்ட் 23ம் திகதி அமாங் தையின் உடல் நிலை மோசமடைந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் கடன் வாங்கவே யாரும் இல்லாத நிலையில், மருத்துவமனையில் இருந்தும் போதிய உதவி கிடைக்காமல் தனது மனைவியின் உடலை 12 கி.மீ தொலைவு நடந்தே எடுத்து வந்துள்ளார்.
இச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இதுகுறித்து கேள்வியுற்ற பஹ்ரைன் பிரதமர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா, மஜ்கியின் குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக அந்த நாட்டு தூதரகம் வழியாக விபரம் கேட்டிருந்தார்.
இந்த நிலையில், பஹ்ரைன் பிரதமர் சார்பில் மஜ்கிக்கு ரூ.9 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பஹ்ரைன் தூதரகம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று காசோலையை மஜ்கிக்கு வழங்கியுள்ளது.
இதற்கிடையே புவனேஷ்வர் நகரைச் சேர்ந்த கலீஙகா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் நிறுவனம், மஜ்கியின் மகள் சாந்தினி, சோனி, பிரமிளா ஆகியோருக்கு இலவசக் கல்வி வழங்க முன்வந்தது. மஜ்கியின் மகள்கள் தற்போது அங்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
625-0-560-320-500-400-194-800-668-160-90-1

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval