Monday, September 12, 2016

பணத்தை திருடும் புதிய மெஷின் (விழிப்புணர்வு பதிவு) :

ERC SB-1000 - Mixed Bill Counter - Basic Model - CURRENCY BILL COUNTING MACHINEசைனாவில் தயாரிக்கப்பட்டு இப்போது இந்தியாவிற்கு இறக்குமதி ஆகியிருக்கும் இந்த பணம் என்னும் மெஷின் பெரிய மால் கடைகள், நகைக்கடைகள், மற்றும் சில ஹோட்டல்களில் உள்ளது..
இதற்கு ஒரு சிறிய ரிமோட் கொடுக்கப்பட்டுள்ளது.. உதாரணத்திற்கு நாம் நகைக்கடையில் 30000 அதாவது 30 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம் ..
அவர்கள் அதை வாங்கி நம் கண்ணெதிரே மிஷினில் போட்டு நமக்கு தெரியாமல் கீழே ரிமோட்டை அமுக்கினால் இரண்டு நோட்கள் காணாமல் போய் 28 நோட்கள் தான் கவுண்டீங் காட்டும்.. நீங்கள் உடனே ஷாக் ஆகி நோட்டுகளை வாங்கி எண்ணினால் 28 நோட்கள் தான் இருக்கும்.. மீண்டும் மீண்டும் எண்ணினாலும் அதே..
இதெல்லாம் உங்கள் கண்ணெதிரே நடப்பதால் வேறு வழி இல்லாமல் நீங்கள் இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்களை கொடுக்க நேரிடும்.. நீங்கள் போன பிறகு அந்த கடைக்காரர் மிஷினை திருப்பி அதற்கு அடியீல் உள்ள அறையை திறப்பார். அதில் காணாமல் போன இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருக்கும் அதை அவர் எடுத்து கொள்வார்.. கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தை நாம் எங்கே தொலைத்தோம் என்று நொந்து போய் தேடிக் கொண்டிருப்போம்..
அதுவும் ரிமோட்டில் பல்வேறு எண்ணிக்கையில் நோட்டுக்களை  திருடும் அளவிற்கு ஆப்சன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.. நீங்கள் கொஞ்சம்  விவரமாக இருந்தால் ஒன்று, இரண்டு நோட்டுகள் பறிபோகும், ஏமாந்தவங்களாக இருந்தால் ஒரே கவுண்டிங்கில் 10 நோட்டுக்கள் மேல் போகலாம்.. 
அதனால் படத்தில் கண்டவாறு மெஷின் மாடல்களை பார்த்தால் ரொம்பவே உஷாராக இருங்கள்.. முதலில் நோட்டுகளை உங்கள் கண்முன்னே கையில் ஒருமுறைக்கு, இருமுறை என்ன சொல்லுங்கள் .. பெரும்பலான கடைகளில் மெஷின்கள் உபயோகிப்பதற்கு காரணம் கவுண்டிங் பர்பசை விட கள்ள நோட்டுகளை கண்டுபிடிப்பதற்குதான்.. அதனால் கள்ள நோட்டுகளை கண்டுபிடிப்பதற்காகதான் மெஷினில் போடுகிறோம் என்று கடை முதலாளிகள் சொன்னால் கூட முதலில் நோட்டுகளை கையில் எண்ணி அதன் எண்ணிக்கையை உA£@றுதி செய்து கொள்ளுங்கள்..
அதற்கப்புறமும் மெஷினில் போட்டுவிட்டு எண்ணிக்கை குறையுதுனு சொன்னால் மிஷினை திருப்பி ரகசிய அறையில் உள்ள நோட்டுகளை கண்டுபிடிப்பதோடு அல்லாமல் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள்!
Mansoor
whats app
















No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval