Saturday, September 3, 2016

இந்த பாட்டிக்கு இருக்கும் நம்பிக்கை


திட்டக்குடி தெற்குவீதியில் ஒரு கடையில் என் மனைவியை மளிகை கடையில் இறக்கிவிட்டு வண்டியில் காத்திருந்தேன்....அப்போது இந்த பாட்டி என்னிடம் கூனிக்குருகி வந்து தம்பி முடக்கத்தான் கீரை வாங்கிக்க தம்பின்னு சொல்லி கீரையை காட்டியது..எவ்வளவு என்றேன் ஒரு கட்டு 30 ரூபாய் எனவும் இரண்டு கட்டு இருக்கு என்றது...என் மனைவியை பாத்தேன் அனுமதி சிக்னல் கிடைத்ததும் இரண்டு கட்டையையும் வாங்கி கொண்டு 100 ரூபாயக குடுத்தேன் சில்லறை இல்லையே தம்பி என்றதும் மீதியை நீங்களே வச்சிக்கங்க என நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மறுத்து சுருக்கு பையில் இருந்த கசங்கிய ரூபாய் நோட்டுக்களை கை நடுக்கத்தோடு எண்ணி மீதியை மளிகை கடைக்காரரிடம் வாங்கி கொடுத்ததோடு மட்டுமில்லாமல் எங்களை வாழ்த்திவிட்டு கீரை விற்ற மகிழ்ச்சியோடு நடந்து சென்றது...தள்ளாத வயதிலும் எங்கோ கரும்பு காட்டில் பிடிங்கி அதை வியாபாரம் செய்து வாழும் இந்த பாட்டிக்கு இருக்கும் நம்பிக்கை நம்மில் எத்தனை பேருக்கு இருக்கும் என்பது ஐயமே!!!
courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval