Saturday, September 17, 2016

ரயிலிலிருந்து தள்ளி பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்த கோவிந்தசாமிக்கு தூக்குத் தண்டனை ரத்து!


SC cancells hanging to Govnidasamyடெல்லி: கேரளாவில் இளம் பெண் செளம்யாவை ரயிலிலிருந்து கீழே தள்ளி விட்டு அவர் படுகாயமடைந்த நிலையிலும் கூட கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமிக்கு விதிக்கப்ட்ட தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து விட்டது. அதற்குப் பதில் அவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக நீதிமன்றம் மாற்றியுள்ளது. படுகாயமடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த செளம்யா பாலியல் பலாத்காரம் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். தண்டவாளத்தில் வைத்து இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டார் கோவிந்தசாமி. 23 வயதான செளம்யா எர்ணாகுளத்தில் உள்ள ஒரு வர்த்தக மையத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2011ம் ஆண்டு அவர் பணி முடிந்து ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே ரயிலில் வந்த கோவிந்தசாமி என்ற தமிழகத்தைச் சேர்ந்த நபர், ரயில் ஆள் அரவமற்ற பகுதியில் மெதுவாக வந்தபோது, செளம்யாவை பலாத்காரம் செய்ய முயன்றார். அவர் தடுத்துப் போராடியபோது, ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளி விட்டார். பின்னர் அவரும் குதித்தார். விழுந்த வேகத்தில் படுகாயமடைந்த செளம்யாவை அவரது உடலிலிருந்து ரத்தம் கொட்டுவதைக் கூட பொருட்படுத்தாமல் கொடூரமான முறையில் நடந்து கொண்ட கோவிந்தசாமி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் மேலும் காயமடைந்த செளம்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்கள் கழித்து பரிதாபமாக உயிரிழந்தார். கைது செய்யப்பட்ட கோவிந்தசாமிக்கு விசாரணை கோர்ட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது பின்னர் இதை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால் தனது தண்டனையை எதிர்த்து கோவிந்தசாமி உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அந்த வவக்கை விசாரித்த நீதிமன்றம், கோவிந்தசாமி பாலியல் பலாத்காரம் செய்தார் என்பது உறுதியாகியுள்ளது. அதேசமயம், அவர் கொலை செய்தார் என்பதற்கான ஆதாரம் இல்லை. மேலும் இது அரிதிலும் அரிதான வழக்காக தெரியவில்லை. எனவே குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை 7 ஆண்டு தண்டனையாக குறைக்கப்படுகிறது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு செளம்யாவின் குடும்பத்தினரை அதிர வைத்துள்ளது. வக்கீல்கள் தங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக செளம்யாவின் தாயார் கதறி அழுதபடி கூறினார். 
courtesy;one India

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval