தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுதாக்கல் நாளை தொடங்குகிறது.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், மாவட்ட ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள், ஊராட்சிமன்ற வார்டுகளின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும் தேர்தல் தேதிகளைத் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் சீதாராமன் சென்னையில் இன்று அறிவித்தார்.
அக்டோபர் 17, 19ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் அக்டோபர் மூன்றாம் தேதியாகும். வேட்பு மனுக்கள் மீதான ஆய்வு அக்டோபர் நான்காம் தேதி தொடங்குகிறது.
வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறக் கடைசி நாள் அக்டோபர் ஆறாம் தேதியாகும். அன்று பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையாளர் சீதாராமன் அக்டோபர் மாதம் 17, 19ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அக்டோபர் 26ஆம் தேதி பதவியேற்றுக்கொள்வர்.
மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நவம்பர் இரண்டாம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் அதன் தலைவர், துணைத்தலைவர்களை மறைமுக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை நாளை முதல் அக்டோபர் மூன்றாம் தேதிவரை காலை 10மணி முதல் மாலை 5மணி வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுக்களை அக்டோபர் ஆறாம் தேதி பிற்பகல் மூன்றுமணி வரை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். முதற்கட்டமாக அக்டோபர் 17ஆம் தேதி சென்னை, திண்டுக்கல் தவிர்த்த 10மாநகராட்சிகள், 64 நகராட்சிகள், 255பேரூராட்சிகள், ளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும். இரண்டாம் கட்டமாக அக்டோபர் 19ஆம் தேதி சென்னை, திண்டுக்கல் மாநகராட்சிகளுக்கும் 60 நகராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெறும். வாக்குப்பதிவு காலை 7மணிக்குத் தொடங்கி மாலை 5மணிக்கு நிறைவடையும்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval