தேங்காய் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்யும், எனவே இதய மற்றும் உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது என்று ஒரு சாரரும். நல்ல கொழுப்பைத்தான் அதிகரிக்கச் செய்யும் ஆகவே சாப்பிடலாம் என்று ஒரு சாரரும் குழம்பிக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.
தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் மற்றும் காப்ரிக் அமிலம் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தாக்கும் வைரஸ் பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.
தேங்காய் பாலில் அதிக புரதம் உள்ளது. இது அல்சர் மற்றும் வயிற்றுப் புண்களை ஆற்றும். நாம் தேங்காய் பாலை காய்கறிகளுடன் சமைப்பதால் தரமான சத்துக்களும், நார்சத்தும் கிடைக்கப் பெறுவதால் அதிலுள்ள நிறைவுறும் கொழுப்பு சமன் படுத்தப்படுகின்றன. இதனால் தேங்காய் பாலில் சமைக்கப்படும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கும். அதோடு இவை HDL எனப்படும் நல்ல கொழுப்பை அதிகப்படுத்துகிறது. இதனால் கொலஸ்ட்ரால் குறையும்.
தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் மற்றும் மைரிஸ்டிக் அமிலம் ஆகியவை உள்ளது. இரண்டுமே நிறைவுறும் கொழுப்பு. பொதுவாக உடலுக்கு நிறைவுறும் கொழுப்பு தீமை தரக் கூடியது. நிறைவுறா கொழுப்பு நல்லது. இங்கேதான் ஒரு முக்கிய விஷயம் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா நிறைவுறும் கொழுப்பும் நமக்கு தீமை செய்வதில்லை. மிகவும் கேடான பாமிடிக் அமிலம் ஒரு நிறைவுறும் கொழுப்பு. இது தேங்காய் எண்ணெயில் குறைவு.
ஆனால் இந்த பாமிடிக் அமிலம் சாக்லேட், பிஸ்கட் மற்றும் மாட்டிறைச்சியில் உள்ளது. நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள் எவை தீமையென. ஆக தேங்காய் எண்ணெயில் நிறைவுறும் கொழுப்பு இருந்தாலும் மிகக் குறைவாகவே உள்ளது. அதும் லாரிக் அமிலம் மிகவும் நிறைந்தவை. இவை உடலுக்கு பாதகம் தராது. மிகக் குறைந்த அளவு உபயோகப்படுத்தலாம்.
courtesy;malaimalar
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval