Tuesday, September 27, 2016

முதல் முறையாக சௌதி அரசாங்க அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் சலுகைகள் குறைப்பு


எண்ணெய் விலை குறைப்பால் தூண்டப்பட்டு சௌதி அரசு இதுவரை எடுத்த சிக்கன நடவடிக்கைகளிலேயே மிகத்தீவிரமானது என்று குறிப்பிடும்படியாக, பெரிய அளவில் அரசாங்க ஊழியர்களின் ஊதியம் மற்றும் சலுகைகள் குறைப்பை சௌதி அரசு அறிவித்துள்ளது.
சௌதியின் பொருளாதாரம், எண்ணெய் தொழில் மூலம் உள்ள வருவாயைத்தான் பெரும்பாலும் நம்பியுள்ளது.
இந்த நடவடிக்கைகள் காரணமாக அமைச்சர்களின் ஊதியத்தில் 20 சதவீதம் குறைக்கப்படும் மற்றும் அரசாங்க அதிகாரிகள் அதிக நேரம் வேலை பார்ப்பதற்கான சம்பளம், விடுப்பு நாள் சம்பளம் மற்றும் இதர சலுகைகள் ஆகியவை குறைக்கப்படும்.
வேலையில் உள்ள சௌதி நாட்டு தொழிலாளர்களில் இரண்டில் மூன்று பங்காக உள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு விதிக்கப்படும் முதல் ஊதியக் குறைப்புக்கு இதுவேயாகும்.
கடந்த ஆண்டு சௌதி அரேபியா தனது பட்ஜெட்டில் நூறு பில்லியன் டாலர் பற்றாக்குறையைப் பதிவு செய்தது. இதனால் சௌதி அரசு புதிய சேமிப்பு திட்டங்களை கண்டறியவும், வருவாயை அதிகரிப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டிய கட்டாயத்துக்கும் தள்ளப்பட்டது.
பல சௌதி நாட்டு ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் சம்பள குறைப்பு அறிவிப்புக்கு அச்சத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். தற்போது கூட, சௌதியின் பொருளாதாரம், எண்ணெய் தொழில் மூலம் உள்ள வருவாயைத் தான் பெரும்பாலும் நம்பியுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval