ஆயிரம் உறவுகள் வந்தாலும் ,தாயின் உண்மையான அன்பிற்கு அது ஈடாகாது.
அந்த வகையில் காலி, பத்தேகமயில் 4 பிள்ளைகள் தமது தாய்க்கு பணிவிடை செய்யும் பொருட்டு இன்றளவும் திருமணம் ஆகாமல் உள்ளனர்.
குறித்த தாயின் வயது 91. அவரின் பிள்ளைகளின் வயது 53,58, 62 மற்றும் 66.
இவர்களில் இருவர் ஆண்கள், இருவர் பெண்கள். இவர்களில் யாருக்கும் வேலை இல்லை.எனினும் தமது தாயை தம்மால் முடிந்தளவு மிகவும் அன்பாக கவனித்து வருகின்றனர்.
பணம் இருந்தும் , சொகுசு வீடுகள் இருந்தும் தாயை தன்னந்தனியாக, முதியோர் இல்லங்களில் விட்டுச் செல்லும் இக்கால பிள்ளைகளுக்கு மத்தியில் இவர்கள் முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval