Friday, September 9, 2016

காவிரி நீர் கிடைக்காவிட்டாலும் கடல் நிர் இருக்கிறதே



புதுதில்லி, செப் 7- காவிரி நீர் கிடைக்காவிட்டாலும் கடல் நிர் இருக்கிறதே என்ற சுப்ரமணிய சாமியின் கருத்துக்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு தர மறுத்து வந்தது. இந்நிலையில் 10 நாட்களில் 15 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு வழங்கிறது. இதைத்தொடர்ந்து கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கை வழங்கி வருகிறது. ஆனால் இந்த தீர்ப்பு குறித்து மீண்டும் மறு சீராய்வு மனுவையும் கர்நாடக அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசு காவிரி நீருக்காக போராடுவதை கைவிட வேண்டும். தமிழகத்தில் குடிநீர் விவசாய தேவையை கடல்நீரை குடிநீராக்கி தீர்த்துக் கொள்ள வேண்டும். இந்த தொழில் நுட்பம் பல நாடுகளில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். வேண்டும் என்றார் கடல்நீரை குடிநீராக்கும் தொழில் நுட்பத்தை இஸ்ரேலில் இருந்து தமிழக அரசுக்கு நான் வாங்கித் தருகிறேன் என்று கூறிஉள்ளார். காவிரி விஷயத்தில் கர்நாடக அரசின் செயல்பாடுகள் விவசாயிகளின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சுப்ரமணிய சாமியின் இந்த கருத்துக்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
courtesy;Theekkathir

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval