ஒருவர் தன்னை 2 லட்சம் மோசடி செய்து விட்டதாக புகார் கூற வந்த பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டு அதை தற்கொலை என ஜோடித்த இன்ஸ்பெக்டருக்கு தஞ்சாவுர் நீதிமன்றம் 12 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.
23 வயதான இளம் பெண் பொறியாளர் அகிலாண்டேஸ்வரி என்பவரை தஞ்சாவுரை சேர்ந்த ஒருவர் 2 லட்சம் மோசடி செய்துள்ளார். இது குறித்து மதுரை தெப்பக்குளம் இன்ஸ்பெக்டராக தற்போது பணியாற்றி வரும் சேதுமணி மாதவன் என்பவரிடம் அகிலாண்டேஸ்வரி புகார் கூறியுள்ளார்.
புகார் அளித்த அகிலாண்டேஸ்வரியை தஞ்சாவுரில் வைத்து சேதுமணி மாதவன் மற்றும் பாலு பலாத்காரம் செய்துள்ளனர்.மேலும் அவரை கொலை செய்து விட்டு தற்கொலை என வழக்கை ஜோடித்துள்ளனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்ததை தொடர்ந்து உண்மை வெளியாகி, தஞ்சாவுர் மகளீர் நீதிமன்றம் தற்போது சேதுமணி மாதவனுக்கு 12 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டைனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.மற்றுமொறு குற்றவாளி பாலு தற்போது உயிரோடு இல்லை
இந்த சேதுமணி மாதவன் தான் மதுரையில் ஜல்லிகட்டிற்காக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடிஅடி நடத்தியவர் என்பது குறிப்பிடதக்கது. அதிலும் குறிப்பாக அவனியாபுரத்தில் கவுதம் அவர்களை அடித்து இழுத்து சென்றது இந்த சேதுமணி மாதவன் தான்.
இதில் வருத்தமான விசயம் என்னவெனில் அகிலாண்டேஸ்வரி கொலை செய்யப்பட்டது 2007 நவம்பர் 19ம் தேதி, கிட்டதட்ட 10 வருடம் கழித்து தீர்ப்பு இன்று வந்துள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval