இன்று உலக மகளிர் தினத்தையொட்டி சென்னையில் இருந்து உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களாக 2 விமானங்களை பெண்களே இயக்குகின்றனர்.
இன்று காலை 6.20 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தை விமானி தீபா, துணை விமானி சிம்ரித்தி சோப்ரா, விமான பொறியாளர்கள் மற்றும் பணி பெண்களாக விமலா, ரியா, ஜீனா, ஸ்ரீலட்சுமி, அன்ஃபியா, ஆகியோர் செல்கிறன்னர். இந்த விமானம் ஏர் பஸ் 321 ரகத்தை சேர்ந்தது. இது மொத்தம் 178 இருக்கைகளை கொண்டது. சென்னையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்படும் இந்த விமானம் காலை 9 மணிக்கு டெல்லி சென்றடைகிறது. மீண்டும் அதே விமானம் காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு பகல் 12.40 மணிக்கு சென்னை வந்தடைகிறது. அந்த விமானத்தையும் பெண்களே இயக்குவார்கள். இந்த விமானத்தில் பயணம் செய்யும் பெண் பயணிகள் அனைவருக்கும் பெண்கள் தினத்தை முன்னிட்டு ரோஜா மலர் அளிக்கப்பட இருக்கிறது. இதே போல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6.50 மணிக்கு சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தையும் பெண்களே இயக்குகின்றனர்.
இதில் விமானியாக கவிதாவும், துணை விமானியாக நன்சி நையாரும் இருப்பார்கள். வழக்கமாக ஏதாவது ஒரு விமானம் மட்டுமே சென்னையில் இருந்து இயக்கப்படும். இந்த ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு 2 விமானங்களை பெண்களே இயக்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைவர்கள் வாழ்த்து : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மார்க்சிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
courtesyDinakaran
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval