Friday, March 24, 2017

மார்ச் 27 வரை தினமும் அதிகளவு நீர் குடிக்க வேண்டும், ஏன் தெரியுமா? இதப்படிங்க!

வருடத்தில் இரண்டு முறை!ஏன் மார்ச் 27 வரை அதிக நீர் குடிக்க வேண்டும்? சம இரவு நாள் என்றால் என்ன?பொதுவாகவே தினமும் நம்மில் யார் போதுமான அளவு நீர் குடிக்கிறோம். கணினியின் முன்னர் அமர்ந்த பிறகு நமக்கு நம்மை சுற்றி இருக்கும் உலகமே மறந்து போகிறது. அவரவர் உடல் எடைக்கு ஏற்ப அனுதினம் நாம் குடிக்க வேண்டிய தண்ணீரின் அளவு வேறுபடுகிறது. சராசரியாக நாளுக்கு 2 - 3 லிட்டர் அவசியம்.  ஆனால், வரும் மார்ச் 27 தேதி வரை உங்களால் முடிந்த வரை சற்று அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன் மார்ச் 27 வரை மட்டும்? எதனால்? பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் வருடத்தில் இரண்டு முறை! வருடத்தின் எல்லா நாட்களும் பகல் இரவு நேரம் சமமாக அமையாது. வருடத்தில் இரண்டு முறை மட்டுமே இது அமைகிறது. ஒன்று மார்ச் மாதத்திலும், மற்றொன்று செப்டம்பர் மாதத்திலும் அமைகிறது. மார்ச் 20 - 27 வரை! இந்த சம இரவு நாட்களில் அதிக அளவு நீர் ஆகாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக தண்ணீர் அதிகம் பருக வேண்டும். அந்த வகையில் இம்மாதம் மார்ச் 20 - 27 வரை (இலையுதிர் கால சம இரவு நாள்) அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சம இரவு நாள் என்றால் என்ன? எந்த தருணத்தில் சூரியனின் மையப்பகுதி நேரடியாக பூமியின் பூமத்திய ரேகையை அவதானிக்கிறதோ, அதை தான் சம இரவு நாள் என கூறுகிறோம். இதை ஆங்கிலத்தில் Equinox என்று அழைக்கின்றனர். சம இரவு நாளின் போது வானநடுவரை எனப்படும் "சூரியனுடன் கச்சிதமான வரிசையில் அமைந்திருக்கும். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் பூமியின் அனைத்து தாக்கமும் சமநிலையில் இருக்கும். நன்மைகள்? இந்த சம இரவு நாளில் பல நன்மைகள் விளைகின்றன என இயற்கை மருத்துவம் பயின்றவர்கள் கூறுகின்றனர். இது தான் உட்பாகங்களை முழுவதுமாக சுத்தப்படுத்த உகந்த நேரம் என்றும் கூறப்படுகிறது. பலன்கள்! இந்த நாளில் அதிக தண்ணீர் பருக வேண்டும். மேலும், இதன் மூலம் அதிக உடற்சக்தி பெற முடியும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், செரிமானத்தை ஊக்கவிக்க முடியும், ஒட்டுமொத்த உயிராற்றலை புத்துயிர் பெற செய்ய உகந்ததாக அமையும் என கூறப்படுகிறது.


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval