உத்தரப்பிரதேசத்தில், இறைச்சிக் கடைக்காரர்கள் மற்றும் மீன் வியாபாரிகள், காலவரையற்ற கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அந்த மாநிலத்தில் அசைவ உணவுக்குத் தட்டுப்பாடு நிலவிவருகிறது.
யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேச முதல்வராகப் பதவியேற்ற ஒரே வாரத்தில், அமைச்சரவையைக் கூட்டாமலேயே, 50 உத்தரவுகளை அதிரடியாகப் பிறப்பித்தார். அதில் முக்கிய உத்தரவுகள் பின்வருமாறு...
* சட்டவிரோதமாக பசுவதை செய்யும் கூடங்களை மூட வேண்டும், பசுக் கடத்தல் தடுப்பு.
* பள்ளி- கல்லூரி முன்பு நின்று பெண்களைக் கேலி செய்வோரைப் பிடிக்க தனிப்படை அமைப்பு.
* அரசு அலுவலகங்களில் குட்கா மற்றும் பான் மசாலா பயன்படுத்தத் தடை.
* ஜூன் 15-ம் தேதிக்குள், அனைத்து சாலைகளையும் குண்டுகுழிகள் இல்லாமல் சீர்செய்ய வேண்டும்.

* ஆசிரியர்கள், பள்ளிக்கு டி-சர்ட் அணிந்து வரக்கூடாது.
* ஆசிரியர்கள், பள்ளியில் தேவையில்லாமல் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது.
* அரசு அலுவலங்களில் பணிபுரிவோர், ஆவணங்களை வீட்டுக்கு எடுத்துப் போகக்கூடாது.
உள்ளிட்ட 50 உத்தரவுகளைப் பிறப்பித்தார். இதில் முதல் உத்தரவான பசுக் கடத்தல் தடுப்பு உத்தரவுக்கு, மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனை எதிர்த்து, இறைச்சிக் கடைக்காரர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் காலவரையற்ற கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு அசைவ உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இறைச்சிக் கடைக்காரர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அந்த மாநில பா.ஜ.க தலைவர் மஸார் அப்பாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். ”முதல்வரின் உத்தரவு, சட்ட விரோதமாக இறைச்சிக் கடை நடத்துவோரைத்தான் பாதிக்கும், நேர்மையாக இருப்பவர்கள் அதுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை” என்றும் மஸார் அப்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.
courtesy ;vikadan
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval