Monday, March 27, 2017

கலெக்டர் மீது பத்தாம் வகுப்பு மாணவி புகார் - தர்மபுரி பரபரப்பு

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு மாணவி சங்கமப்ரியா .   இவர், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் விவோகனந்தன் மீது குழந்தைகள் பாதுகாப்பில் (சையில்டு லைன்) கொடுத்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாவது:

’’நான் இலக்கியம்பட்டி பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து தற்போது தேர்வு எழுதி வருகிறேன். மாவட்ட ஆட்சியர் விவோகனந்தன்,  தர்மபுரி மருத்துவமனை கல்லூரி டீன் சாமிநாதன்,  அவரது அலுவலக ஊழியர்கள் மூலம் 24ந் தேதி இரவு 8 மணிக்கு விசாரனைக்கு வரவேண்டும் என்று சம்மன் கொடுத்தார். 

தேர்வு நேரம் என்பதால் விசாரனைக்கு நான் செல்லவில்லை, ஆனால் தொடர்ந்து எனக்கான டார்ச்சர் வந்து  கொண்டே இருந்தது. விளக்கம் கேட்டதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு என்று மட்டும் பதில் கிடைத்தது.

 அய்யா தேர்வு முடியும் வரை நான் எந்த விசாரனைக்கும் வரவே ஒத்துழைப்பு தரவே முடியாது ஆட்சியரின் தொடர் நெருக்கடியில் இருந்து பாதுகாக்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்’’ என்று  முடித்துள்ளார் சங்மப்ரியா..?

 சங்கமப்ரியா வேறு யாரும் இல்லை.  தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரியின் மகள் ஆவார்.

 சங்மபிரியாவிற்கு என்ன பிரச்சனை என்று சிஇஒ மகேஸ்வரியிடம் பேசினோம்., சார் சட்டத்திற்கு உட்பட்டு அதுவும் மாவட்ட ஆட்சியர் கூட்டத்திலேயே ஆட்சியரிடம் தெரிவித்து எனது மகள் சங்கமபிரியாவிற்கு ஒரு மணிநேரம் கூடுதலாக தேர்வு எழுத சட்டபடி அனுமதி பெற்று தேர்வு எழுதி வருகின்றார். ஆனால் தொடர்ந்து தேர்வு நேரத்திலேயே விசாரனை என்ற பெயரில் சங்கமபிரியாவை தனித்து போட்டோ எடுப்பது, அது மட்டும் இல்லாமல் விசாரனைக்கு வரவேண்டும் என்று டார்ச்சர் செய்கின்றார்.

 ஒரு மணிநேரம் கூடுதலாக?

 ஆம் சங்கமப்ரியாவிற்கு சிறு குழந்தையாக இருந்தே வலது கை 40% குறைபாடு உடன் இருந்து வருகின்றார். வேகமாக தேர்வு எழுத முடியாது., என்பதை மாவட்ட ஆட்சியர் கூட்டத்திலேயே தெரிவித்து தனி அதிகாரிகளை வைத்து கண்காணிக்க ஆட்சியரிடம் தெரிவித்துவிட்டேன். காரணம் நான் முதன்மை கல்வி அதிகாரி என்பதால், ஆனால் ஆட்சியர் விசாரனை செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்டும்,  தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகின்றார்.  காரணம் தெரியவில்லை என முடித்து கொண்டார் முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி.

 ஆனால் முதன்மை கல்வி அதிகாரிகளிடம் பேசியபோது., கல்வித்துறையில் ஆண்டுதோறும் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி என்று ஒரு நிதி ஒதுக்குவார்கள்., இந்த ஆண்டு 64 இலட்ச ரூபாய் மிகவும் பின்தங்கியுள்ள தர்மபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கியுள்ளனர்.

 இந்த நிதியை கொண்டு மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு சிறப்பு வகுப்புகள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகர்ணங்கள் வாங்க பயன்படுத்த வேண்டும்.

 ஆனால் மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன்  தர்மபுரியில் உள்ள ஒரு சில போட்டோ வீடியோ ஸ்டூயோ கடை உரிமையார்கள் மூலம் தனியார் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பது போன்று பதிவு செய்து 20 இலட்ச ரூபாய்க்கு செக் கொடுக்க சொல்லி சிஇஒ மகேஸ்வரியை டார்ச்சர் செய்துள்ளார்.

 இதற்கு துளியும் ஒத்துழைக்காத சிஇஒ மகேஸ்வரியை பழி வாங்கும் நோக்கத்தில் மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் சிஇஒ மகேஸ்வரி மகள் சங்கமப்ரியாவை தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி டார்ச்சர் செய்ததாக குறிப்பிடுகின்றனர். அதிகாரிகளின் மோதல் வெளிச்சத்திற்கு வந்ததில் ரொம்பவே குழம்பிபோயுள்ளனர் கல்வித்துறை அதிகாரிகள் மாவட்டத்தில்.

- எம்.வடிவேல்  
நக்கீரன் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval