Wednesday, March 1, 2017

14 வயதில் ஈமெயிலை கண்டுபிடித்த உலகம் வியந்த தமிழன், இன்று கேட்பாரற்று!


பூர்வீகம்!ஈமெயில் உண்மை தந்தை சிவா அய்யாதுரை பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.
32 வருடங்களுக்கு முன் ஒரு 14 வயது தமிழ் சிறுவன் இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ஃபோல்டர், மெமோ,
அட்டாச்மெண்ட், அட்ரஸ் புக் என அனைத்தும் அடங்கிய மின்னஞ்சல் சிஸ்டத்தை உருவாக்கினார். அவர் தான் அமெரிக்காவாழ் தமிழர் சிவா அய்யாதுரை. இன்று பெரும்பாலான மின்னஞ்சல் செயலிகள் இம்முறையில் தான் இயங்கி வருகின்றன. ஆனால், இவர் உலகில் அதற்கான தகுந்த அங்கீகாரம் கிடைக்காமல் ஓரம்கட்டப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தேறியுள்ளது.... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் தமிழர்! சிவா அய்யாதுரை அவர்கள் இந்தியாவில் பாம்பேவில் பிறந்த தமிழர். ஏழு வயதிலேயே இவர் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுவிட்டார். நியூ ஜெர்சியில் உள்ள லிவிங்ஸ்டன் மேல்நிலை பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது தான் இவர் மின்னஞ்சல் இயக்கம் குறித்து நியூ ஜெர்சி பல்கலைக்கழகத்திற்காக பணியாற்றினார். பூர்வீகம்! சிவா அய்யாதுரையின் அப்பா, ராஜபாளையத்தை சேர்ந்தவர், அம்மா பரமன்குறிச்சியைச் சேர்ந்தவர் என்பது என்பதும் குறிப்பிடத்தக்கது. உன்னித்து கவனிக்க கூடியவர்! மிக உன்னிப்பாக உள்வாங்கி கவனிக்கும் திறன் கொண்ட சிவா அய்யாதுரை அவர்கள் இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், டிராப்ட், ஃபோல்டர், அட்ரஸ் புக் அடங்கிய அடங்கிய மின்னஞ்சல் இயக்கத்தை கண்டுபிடித்தார். மெய்நிகர்! 50,000 வரிகள் அடங்கிய கோடுகள் கொண்டு ஒரு கம்பியூட்டர் ப்ரோக்ராம் உருவாக்கினார் சிவா அய்யாதுரை. இது எலக்ட்ரானிக் முறையில் இன்டர்ஆபீஸ மின்னஞ்சல் இயக்கத்தை எதிரொலிக்கும் வகையில் அம்சங்கள் கொண்டிருந்தது. அமெரிக்க அங்கீகாரம்! சிவா அய்யாதுரையை ஆகஸ்ட் 30,1982-ல் அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சலை கண்டுப்பிடித்தவர் என காப்புரிமை அளித்து பாராட்டியது. ஆனாலும்ம், மாடர்ன் கம்ப்யூட்டர் சயின்ஸ் வரலாற்றில் இவர் பெயர் இடம் பெறாமல் போனது வேதனையான ஒன்று. காப்புரிமை சான்றிதழ்! சிவா அய்யாதுரை அவர்களுக்கு அமெரிக்க அரசு வழங்கிய காப்புரிமை சான்றிதழ். மின்னஞ்சல் தந்தை! சென்ற ஆண்டு சிவா அண்ணாதுரை அவர்கள் ஒருமுறை பேட்டியில், உலகளவில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அமெரிக்காவை சேர்ந்த ரே டாம்லின்ஸ்டன் தான் மின்னஞ்சல் தந்தை என அழைக்கப்படுகிறார். ஆனால், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ஃபோல்டர், மெமோ, அட்டாச்மெண்ட், அட்ரஸ் புக், ரிப்ளை, ஃபார்வர்டு போன்ற அம்சங்கள் அடங்கிய மின்னஞ்சலை உருவாக்கியது நான் தான் என கூறியிருந்தார். நிறவெறி! நிறவெறி காரணமாக தன்னை பின் தள்ளுவதாக மேற்கத்திய ஊடகங்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார் சிவா அண்ணாதுரை அவர்கள். 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval