*மாதிரிதான்.நாம் எப்படிப் பழகுகிறோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்.*
*⚜உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை.*
☀குழந்தைகளிடம் பழகிப் பாருங்கள்.நாம் எப்படி இருந்தோம் எனத் தெரியும். வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள்.நாம் எப்படி இருக்கப் போகிறோம் எனத் தெரியும்.
*⚜ஒருவர் உன்னைத் தாழ்த்திப் பேசும் போது ஊமையாய் இரு....புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு...எளிதில் வெற்றி பெறுவாய்.*
☀சங்கடங்கள் வரும்போது தடுமாறாதே.சந்தர்ப்பங்கள் வரும் போது தடம் மாறாதே.
*⚜வளமுடன் வாழும் போது நண்பர்கள் உன்னை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுது நண்பர்களை நீ அறிவாய்.*
☀ஒருமுறை தோற்றுவிட்டால் அதற்கு நீ ஒருவரைக் காரணம் சொல்லலாம்.தோற்றுக் கொண்டே இருந்தால் அதற்கு நீ மட்டுமே காரணம்.
*⚜நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும்.மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்.உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.*
☀அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.
*⚜வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர். ஒருவர், யார் பேச்சையும் கேட்காதவர்.மற்றொருவர், எல்லோர் பேச்சையும் கேட்பவர்.*
☀எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும்:வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறிவிடும்.
*⚜நீ ஒருவனை ஏமாற்றிவிட்டால் அவனை முட்டாள் என்று நினைக்காதே.நீ ஏமாற்றியது அவன் உன்மேல் வைத்த நம்பிக்கையையே.*
☀அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம்.கோபத்தை அடக்கி ஆளும் திறமை படைத்தவன் என்பதே அர்த்தம்.
*⚜மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை....!அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!*
தகவல் Shaik Ali
california U S A
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval