தேவையான பொருட்கள்
கருப்பு திராட்சை பழம் - 2 கப்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/4 கப்
தண்ணீர் - தேவையான அளவு
ஐஸ் கட்டி - 10
செய்முறை
திராட்சை பழத்தை நன்கு தண்ணீரில் கழுவிக் கொள்ளவும்.
திராட்சை பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
திராட்சை ஜூஸியில் எலுமிச்சை சாறு, தண்ணீர், சர்க்கரை, ஐஸ்கட்டி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு கிளாஸியில் திராட்சுஜூஸ் ஊற்றி அதன் மேலாக ஐஸ் கட்டியைப் போட்டு பருகலாம்.
திராட்சை ஜூஸ் ரெடி!
பயன்கள்:
திராட்சை ஜூஸ் குடிப்பதால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தி மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.
திராட்சை ஜூஸ் சர்க்கரை சேர்க்காமல் குடித்தால் கொடுமையான ஒற்றைத்தலைவலியில் இருந்து விடுபடலாம்.
உடம்பில் மெட்டாபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் குறைக்கப்பட்டு உடல் எடை குறையும்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval