பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவைப் பெற, மாணவர்கள் தங்களின் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என்ற அரசின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.,.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 10 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான ஏழைக்குழந்தைகள் ஊட்டச்சத்து பெற மதிய உணவு திட்டம் முக்கிய காரணியாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஏழைப் பெற்றோருக்கு, மிகப்பெரிய ஆறுதலாக மதிய உணவுத் திட்டம் கருதப்படுகிறது.
இந்நிலையில், மாணவர்கள் அரசு வழங்கும் மதிய உணவைப் பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்க அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆதார் எண் இல்லாத மாணவர்கள், வரும் ஜூன் மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பிக்கப்பட்டதற்கான சான்றுடன், அரசின் வேறு ஏதேனும் ஒரு சான்றிதழை இணைத்து, பள்ளிகளில் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்துக்குள் அவ்வாறு வழங்காத மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட மாட்டாது என கூறப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் நிறைந்த குழந்தைகள் உள்ள இந்தியாவில், அவர்களுக்கு வழங்கப்படும் உணவைப் பெற கட்டுப்பாடுகள் விதிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நியூஸ் 7
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval