Saturday, March 4, 2017

உங்க உடம்புல் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ இந்த சத்துக்கள் குறைவா இருக்குன்னு அர்த்தம்


கீழ்வரும் சில அறிகுறிகள் உங்கள் உடலில் உண்டாகிறதா என்று முதலில் கண்டுபிடியுங்கள். அது எதனால் உண்டாகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

எவ்வளவு சாப்பிட்டாலும் அடிக்கடி பசி உண்டாகிறதா? அகோர பசியும் ஒரு வகையான நோய் தான்.

உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அது விரைவில் குணமாகாமல் இருக்கிறதா?

நகம் மற்றும் தோல் உரிதல் உண்டாகிறதா?

அதிக அளவில் முடி கொட்டுகிறதா?

தசை மற்றும் மூட்டுவலி உண்டாகிறதா? பதப்படுத்தப்பட்ட உணவின் மீது நாட்டம் அதிககமாகக் கொண்டிருக்கிறீர்களா?

உடலில் நீர்வீக்கங்கள் அடிக்கடி உண்டாகிப் பாடாய் படுத்துகிறதா?

இந்த கேள்விகள் அத்தனைக்கும் ஒரே காரணமும் பதிலும் தான் உண்டு. அது என்ன தெரியுமா?  அது தான் புரதம்.

ஆம். உங்கள் உடலுக்குத் தேவையான புரதச்சத்து குறையும் போது தான் இந்த பிரச்னைகள் அனைத்தும் உண்டாகின்றன. இந்த அறிகுறிகள் உங்கள் உடலில் தென்பட்டால் உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் உடலில் புரதச்சத்து அதிகமுடைய உணவுகளைச் சேர்த்துக் கொள்வது தான். 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval