வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையை கட்டுப்படுத்த சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் BS3 என்ற கட்டுப்பாட்டு விதிமுறைகளை கொண்டு வந்தது. இதன் அடிப்படையில் மோட்டார் வாகன நிறுவனங்களை பைக்குகளை தயாரித்தனர். பின்னர் இதை மாற்றி புதிதாக கூடுதல் கட்டுப்பாடுகளை சேர்த்து BS4 என்ற கட்டுப்பாட்டு விதிகளை கொண்டு வந்தது இது 2010 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றது.
தற்போது உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 1 க்கு பிறகு BS3 விதிமுறைப்படி தயாரிக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்யக் கூடாது எனத் உத்தரவிட்டுள்ளது. 8 லட்சம் வாகனங்கள் BS3 விதிப்படி தயாரிக்கப்பட்டு இன்னும் விற்பனை செய்யப்படாமல் உள்ளது.
BS3 விதிமுறைகளின் படி வாகனங்களை தயாரித்த நிறுனங்கள் தற்போது தயார் செய்த வாகனங்களை என்ன செய்வது என தெரியாமல் திண்டாடி வருகின்றது.
எப்படியாவது நஷ்டத்தை சமாளிக்க HONDA உள்ளிட்ட நிறுவனங்கள் டூ வீலர்களுக்கு அதிரடியான விலை குறைப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. உதாரணமாக ACTIVA க்கு 13500 ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கியுள்ளது. NAVI என்ற மாடலுக்கு 20 ஆயிரம் டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பஜாஜ் சுசுகி போன்ற நிறுவனங்கள் 22 ஆயிரம் வரை டிஸ்கவுண்ட் வழங்குகின்றது.
இந்த சலுகை 2 நாளைக்கு மட்டுமே. அதற்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அமலுக்கு வந்துவிடும்.
ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்கள் வெளியிட்ட அதிரடி சலுகைகள். பைக் வாங்க விரும்பியவர்களுக்கு இது நல்ல தருணம்! மேலும் பல Two wheeler நிறுவனங்கள அதிரடி விலை குறைப்பு செய்துள்ளது. ஒவ்வொரு Show Room களும் தங்களிடம் உள்ள stock தகுந்தவாறு விலைகளை குறைத்துள்ளது, நேரடியாக show room க்கு சென்று விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval