பெங்களூருவில் பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் கொடூர ஆயுதங்களால் ரவுடி சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.
பெங்களூருவில் மாநகரத்தில் கமலாநகரில் கடந்த புதன் கிழமை (மார்ச் 8ம் தேதி) காலை சுனில் என்ற ரவுடியை அவரது எதிரிகள் பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
சுனில் என்ற ரவுடி கொலை, கொள்ளை போன்ற சமூக விரோத மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் நடந்த கொள்ளை சம்பவத்திற்காக அவர் சிறையிலிருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் விடுதலையாகி வந்துள்ளார்.
இந்நிலையில், நாகா என்ற ரவுடியை சுனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொலை செய்ய முயற்சித்ததாகவும் அந்த கொலை முயற்சியிலிருந்து நாகா ஆழமான காயங்களுடன் தப்பித்ததாகவும் போலீசார் செய்தியாளர்களிடம் கூறினர். இதனால் முன்பகை காரணமாகவே சுனில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
கொலை நடந்த அன்று காலை 8:45 மணியளவில் சுனில் அவரது வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அவனுக்காக காத்துக் கொண்டிருந்த ரவுடிகள் அவனை கொலை செய்வதற்காக விரட்டியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிய சுனில் ஒரு வீட்டிற்குள் நுழைந்து கதவை அடைத்துள்ளார், ஆனால் கதவை உடைத்து சுனிலை வெளியே இழுத்துப்போட்டு கொலையாளிகள் கொடூரமான ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இந்த கொடூர கொலையை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்துள்ளனர், அதில் ஒருவர் அவருடைய மொபைலில் வீடியோ எடுத்து அதனை போலீசாரிடம் கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
பெங்களூருவில் சமீப காலமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றுவருவதாகவும், அதனை தடுக்க போலீசார் துப்பாக்கிச் சூடு போன்ற செயல்களில் ஈடுபட்டாலும் ரவுடிகள் அதைக் குறித்து கவலைப்படுவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval