ஸ்கூட்டர் வாங்க செல்லும் பெண்களை குறி வைத்துதான் இந்த மோசடியில் டூவீலர் ஷோரூம் ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். பெண் கஸ்டமர்களுக்கு பைக்குகளின் மார்க்கெட் நிலவரம் தெரியாது என்பது இவர்கள் கணக்கு.
சென்னை: டூ வீலரை விற்று தீர்த்தாக வேண்டிய கட்டாயத்தில் சென்னை உட்பட நாட்டின் பல நகரங்களிலும் நேற்று விடிய விடிய ஷோரூம்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. அதேநேரம், வாடிக்கையாளர்களை ஏமாற்றி அதிக விலைக்கு டூ வீீலர் விற்பனை செய்யும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு பி.எஸ்-3 அடிப்படையில் தயாரான டூவீலர், கார்களை விற்பனை செய்வது மற்றும் ரிஜிஸ்டர் செய்வது கூடாது என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை நேற்று முன்தினம் பிறப்பித்தது. இதையடுத்து மார்ச் 31ம் தேதிக்குள் பைக்குகளை விற்பனை செய்ய ஷோரூம்களில் அதிரடி தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹீரோ, ஹோண்டா போன்ற நிறுவனங்கள்தான் அதிக அளவில் டிஸ்கவுண்டுகளை அறிவித்துள்ளன. பஜாஜ் நிறுவனம் டிஸ்கவுண்டோடு சேர்த்து இலவச இன்சூரன்ஸ்சும் செய்து கொடுப்பதாக கூறியுள்ளது.
courtesy;One India
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval