ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே உள்ள அடுத்தக் குடி கிராமத்தை சேர்ந்த தாரணி (வயது 19) என்பவர் கல்லூரி முதலமாண்டு படித்து வந்துள்ளார்.
இவர் வீட்டில் தனியாக இருந்த போது அந்த பகுதியை சேர்ந்த குமார் (வயது 32) என்பவர் தாரணியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
தப்பித்த கொலைகாரன் குமாரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலிசில் ஒப்படைத்துள்ளனர்.
கொலை செய்தது ஏன் குமார் அளித்த வாக்கு மூலம்:
நான் தாரணியை காதலித்தேன் ஆனால் தாரணி என்னை காதலிக்க வில்லை, எனது பெற்றோரை விட்டு பெண் பேசினேன், தாரணி வீட்டார் மறுத்து விட்டனர்.
நான் தகராறு செய்ததும் என் மீது போலிசில் புகார் அளித்தனர். இதனால் ஆத்திரடைந்து நான்ஈ, எனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்கக் கூடாது என முடிவு செய்தேன்.
தாரணியின் பெற்றோர் ஊருக்கு சென்ற நேரம் பார்த்து வீட்டின் பின் பக்கமாக நுழைந்தேன் தாரணியிடம் என்னை காதலிக்குமாறும் திருமணம் செய்து கொள்ளுமாறும் வர்ப்புறுத்தினேன் தாரணி எனது காதலை ஏற்கவில்லை.
இதனால் தாரணியின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க தொலைக்காட்சி சப்தத்தை அதிகப்படுத்தி வைத்தேன் இருப்பினும் ஊர் மக்களுக்கு தெரிந்து விட்டது என்னை பிடித்து விட்டனர்.
இவ்வாறு குமார் வாக்கு மூலம் அளித்துள்ளான்.
போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
சுவாதியில் ஆரம்பித்தது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது இதற்கு எப்பொழுது ஒரு முற்று புள்ளி வரும் என்பது அனைத்து பெற்றோர்களின் கவலையாக உள்ளது.
காவல் நிலையத்தில் குமார் மீது பெற்றோர் புகார் கொடுத்திருந்த போதிலும் இந்த கொலை நடந்துள்ளது குறிப்பிடத்ககது.
கொலை செய்தது இவன் தான் என பொதுமக்களும் பார்த்து விட்டார்கள் அவனும் ஒத்துக் கொண்டு விட்டான், ஆனால் விசாரனை என்ற பெயரில் இவனுக்கு தண்டனை கிடைக்க (கிடைக்காமலும் போகலாம்) பல ஆண்டுகள் ஆகும் என்பதே இது போன்ற சம்பவங்கள் தொடர அடிப்படை காரணம்.
.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval