நம்முடைய முன்னோர்கள் புளியை அன்றாட உணவில் வெறும் சுவைக்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று எண்ணி, நாமும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அது புளிக்குள் ஒளித்திருக்கும் ஏராளமான மருத்துவ உணடமைகளைப் பற்றி நாம் அறிந்து கொண்டதே இல்லை.
முன்பெல்லாம் வயதானவர்குளுக்குத் தான் மூட்டுவலி பிரச்னைகள் இருக்கும். ஆனால் இன்றைய வாழ்க்கைச்சூழல், உணவுப் பழக்கங்களால் எந்த பிரச்னையும் எத்தனை வயதில் வேண்டுமானாலும் வருகிறது. ஆனால் இந்த மூட்டுவலியைப் போக்கும் ஆற்றல் புளிக்கு உண்டு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
முதலில் நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு புளியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரும். அதிகபட்சமாக 100 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம். எலும்புகள் தேய்மானத்தைக் குறைக்குமாதலால் அதனால் உண்டாகும் மூட்டுவலி விரைவிலேயே கட்டுக்குள் வரும்.
100 கிராம் புளியில் ஒரு நாளைக்கு நமக்குத் தேவைப்படுகிற இரும்புசத்து கிடைக்கிறது.
புளியால் உண்டாகும் நன்மைகள்
ஜீரணக்கோளாறுகளைச் சரி செய்யும்.
நேயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.
உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. அதோடு உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளைக் கரைக்கும் சக்தியும் புளிக்கு உண்டு.
புளி மூட்டுவலியை எளிதில் குணப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும் கால்களில் உண்டாகும் நீர்த்தேக்கம், வீக்கம், கீழ்வாதம் போன்றவற்றையும் குணப்படுத்தும்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval