Friday, March 17, 2017

20 திர்ஹத்தில் எமிரேட்ஸ் விமானத்தில் உலகைச் சுற்றி வரும் வாய்ப்பு!

Image may contain: airplane
துபாய் அரசுக்கு சொந்தமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் (Emirates Airlines) விமான நிறுவனம் 'ஒரு நல்ல காரியத்திற்கு நன்கொடை' வசூலிக்கும் நோக்குடன் 20 திர்ஹத்தில் உலகை சுற்றலாம் என்ற சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. (Emirates is giving away one million Skywards Miles, all for a good cause)

எமிரேட்ஸ் விமானத்தில் அடிக்கடி பறக்கும் ( Frequent Flyers ) உறுப்பினர்கள் யாவரும் 20 திர்ஹம் செலுத்தி 'ஒரு மில்லியன் நன்றிகள்' எனும் பெயரில் நடத்தப்பட உள்ள தர்ம காரியங்களுக்கான தொண்டுசார் குலுக்கலில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஒருவருக்கு '1 மில்லியன் மைல் தூரம்' இலவசமாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் பறக்க வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த பரிசை கொண்டு, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் எகனாமி வகுப்பில் துபையிலிருந்து ஐரோப்பாவிற்கு 22 முறையும், துபையிலிருந்து தூர கிழக்கு நாடுகளுக்கு 19 முறையும், அமெரிக்கா ஆஸ்திரேலியாவுக்கு 13 முறையும் இலவசமாக பறக்கலாம்.

மேலும் இரண்டாம் இடம் பெறுபவருக்கு 500,000 வான் மைல் தூரமும், மூன்றாம் இடம் பெறுபவருக்கு 250,000 வான் மைல் தூரமும் பரிசாக வழங்கப்படவுள்ளன.
Source: Khaleej Times / Msn

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval